சிங்கர் Fashion Academy மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய Singer Fashion Show 2017  நிகழ்வு

12 Sep, 2017 | 06:39 PM
image

இலங்கையில் வளர்ந்துவரும் நவநாகரிக வடிவமைப்பாளர்களுக்கு இனங்காணல் அங்கீகாரம் அளிக்கும் வகையில் விருதுகள் நிகழ்வு Singer Fashion Academy இல் டிப்ளோமா கற்கையை முன்னெடுக்கும் மாணவர்களின் வடிவமைப்புக்கள் மற்றும் படைப்புக்களை வெளிக்காண்பிக்கும் வருடாந்த நிகழ்வான Singer Fashion Show மற்றும் விருதுகள் நிகழ்வு 2017 அண்மையில் பிஷப் கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. 

Fashion Show இடம்பெற்ற சமயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருதுகள் நிகழ்வில் அவர்களுடைய முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

Fashion Show மற்றும் விருதுகள் நிகழ்வு ஆகியன ஆண்டுதோறும் இடம்பெற்றுவருவதுடன், Singer Fashion Academy இன் பிரதான நிகழ்வுகளாகவும் இவை கருதப்படுகின்றன. 

பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் முன்னிலையில் ஒய்யார நடை (catwalk) மூலமாக டிப்ளோமா மாணவர்கள் தமது படைப்பாக்கத் திறமைகளை காண்பிக்கவும் இது வாய்ப்பளிக்கின்றது. அதன் மூலமாக அவர்கள் தமது தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வது மட்டுமன்றி, விசாலமான மட்டத்தில் வர்த்தகரீதியான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவும் வழிகோலுகின்றது.

கண்டிய ஆடையணி, அலுவலக ஆடையணி, சிறுவர்களுக்கான ஆடையணி, விளையாட்டு ஆடையணி, மாலைப்பொழுது ஆடையணி, வழக்கமான ஆடையணி மற்றும் இந்திய ஆடையணி என 7 கவர்ச்சியான நவநாகரிக பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற Fashion Show நிகழ்வுடன் ஒன்றியதாக விருது வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது. வெற்றியாளர், 2 ஆம் இடத்திற்கான வெற்றியாளர் மற்றும் 3 ஆம் இடத்திற்கான வெற்றியாளர் என்ற தெரிவு அடிப்படையில் fashion show பரிசுகளின் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறிவியல்ரீதியிலான ஆடை தயாரிப்பு டிப்ளோமா கற்கைநெறி மற்றும் தையல் இயந்திர பூத்தையல் டிப்ளோமா கற்கைநெறி ஆகியவற்றை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த அனைத்து மாணவர்களுக்கு விருதுகள் நிகழ்வில் தமக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட நவநாகரிக பிரிவுகளின் ஒட்டுமொத்த வெற்றியாளர்களுக்கும் அவர்களுடைய முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ்களும், பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. Fashion Show நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் பங்குபற்றியமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவின் கீழும் Fashion Show நிகழ்வின் வெற்றியாளர்களுக்கும், டிப்ளோமா பரீட்சைகளில் அனைத்திலங்கை ரீதியில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றவருக்கும் நவீன, இலகுவில் எடுத்துச் செல்லக்கூடிய தையல் இயந்திரங்கள் நிகழ்வில் வழங்கப்பட்ட பெறுமதிமிக்க பரிசுகளில் அடங்கியிருந்தன.

எமது மாணவர்களின் படைப்பாக்கத்திறனை வெளிக்காண்பிக்கும் வகையில், இந்த ஆண்டு Fashion Show நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதை முன்னிட்டு Singer Fashion Academy மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. தையல் துறையில் ஆர்வமுள்ளவர்கள் மத்தியில் அறிவை வழங்கி, படைப்பாக்கத்திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு உதவும் பயணத்தில் Singer Fashion Academy வெற்றிகரமாக நடைபோட்டு வருகின்றது. இந்த விருது வழங்கல் நிகழ்வு அதற்குச் சான்றாகும்.

நவநாகரிகத்துறையில் ஆர்வம் கொண்ட இவர்கள் அனைவரும், வெற்றிகரமான, தொழில் முனைப்பு கொண்ட கட்டங்களை எட்டியுள்ளதை நாம் கண்டுள்ளோம்” என்று சிங்கர் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் குறிப்பிட்டார்.

இந்த Fashion Academy, நாடளாவியரீதியில் பிரதானமாக சிங்கர் ப்ளஸ் காட்சியறைகளில் அமைந்துள்ள 70 கற்கைமையங்களில் வகுப்புக்களை நடாத்தி வருவதால், இத்துறையில் அபிலாஷை கொண்டுள்ள மாணவர்கள் சௌகரியமான அமைவிடங்களில் தமது கற்கையை இலகுவாக முன்னெடுப்பதற்கு இடமளித்துள்ளது. 

வகுப்புக்கள் சிங்கர் கிளைகளில் நடாத்தப்படுவதன் காரணமாக, கற்கைநெறிகளை முன்னெடுக்கும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வீட்டுச் சூழலுக்கான உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். முழுமையான பாடநெறிகளின் மூலமாக தத்துவ அறிவியல் மற்றும் செயன்முறை அனுபவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன், சகல உபகரண வசதிகளையும் கொண்ட வகுப்பறைகளில் தனிப்பட்ட ரீதியாக நேரடி அனுபவத்துடனான போதனா வகுப்புக்கள் இடம்பெறுகின்றன.

இந்த அக்கடமி தனது கிளை வலையமைப்பை விஸ்தரிக்கும் வகையில் அண்மையில் வரக்காப்பொல, கல்கிசை, பிலிமத்தலாவ மற்றும் ருவான்வெல்ல ஆகிய நகரங்களிலும் கிளைகளை ஆரம்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right