நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை: 650 இற்கும் மேற்பட்டோர் கைது!

Published By: Digital Desk 1

11 Apr, 2026 | 11:38 AM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் பெரும் எண்ணிக்கையிலான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் அனைத்துப் பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்புகளில், ஒட்டுமொத்தமாக 34,493 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 654 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 21 பேர் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 207 பேரும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 119  இதன்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வீதி ஒழுங்குமுறைகளை மீறிய சாரதிகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்திய 183 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 67 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 4,627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35