( இணையத்தள செய்திப் பிரிவு )
வியன்னாவில் இடம்பெற்ற சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் பங்கேற்பைத் தொடர்ந்து சில முக்கிய இணக்கப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் போது ,
ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து இலங்கையின் தொழில்துறை மற்றும் எரிசக்தி வினைத்திறனை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, உலகளாவிய எரிசக்தி சவால்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்து சர்வதேச தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.
குறிப்பாக, இலங்கையின் தொழில்துறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், நிறுவன ரீதியான ஆதரவை வலுப்படுத்துதல் மற்றும் புதிய சர்வதேச கூட்டாண்மைகளை உருவாக்குவது குறித்து ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பின்அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் தொழில்துறைகளில் நிலவும் அதிகப்படியான உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், எரிசக்தி வினைத்திறனை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சர்வதேச ஒத்துழைப்பானது, இலங்கையை உலகளாவிய தொழில்துறை வலையமைப்புகளுடன் வலுவாக இணைப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் நீண்டகால நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM