ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு 3ஆவது நேரடி வெற்றி; றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதலாவது தோல்வி

Published By: Vishnu

11 Apr, 2026 | 12:50 AM
image

(நெவில் அன்தனி)

குவாஹாட்டி பர்சாபுரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற இண்டியன் ப்றீமியர் லீக் போட்டியில் றோயல் செல்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் இலகுவாக வெற்றிகொண்டது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஈட்டிய மூன்றவாது நேரடி வெற்றி இதுவாகும். அதேவேளை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதலாவது தோல்வியைத் தழுவியது.

15 வயதே நிரம்பிய இளம் புயல் வைபவ் சூரியவன்ஷி, த்ருவ் ஜுரெல் ஆகியோர் குவித்த அதிரடி அரைச் சதங்கள் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

றோயல் செலஞ்சர்ஸ்  பெங்களூரு  அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு  அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் முதலாம் இடத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் யஷஸ்வி ஜய்ஸ்வால் (13) குறைந்த எண்ணிக்கையுடன் ஆட்டம் இழந்தார்.

ஆனால், 15 வயதான இளம்புயல் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி த்ருவ் ஜுரெலுடன் இரண்டாவது விக்கெட்டில் 37 பந்துகளில் 108 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஆனால், வைபவ் சூரியவன்ஷியும் அடுத்து களம் நுழைந்த ஷிம்ரன் ஹெட்மயரும் ஒரே மொத்த எண்ணிக்கையில் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். (129 - 3 விக்.)

வைபவ் சூரியவன்ஷி 26 பந்துகளில் 8 பவுண்டறிகள். 7 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைக் குவித்தார்.

அணித் தலைவர் ரெயான் பராங் 3 ஓட்டங்களை மட்டும் பெற்றார். (134 - 4 விக்.)

இந் நிலையில் த்ருவ் ஜுரெல், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வெற்றி அடையச் செய்தனர்.

43 பந்துகளை எதிர்கொண்ட த்ருவ் ஜுரெல் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 81 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்தவீச்சில் க்ருணல் பாண்டியா 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சற்று சிரமத்தை எதிர்கொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  விராத் கோஹ்லி, அணித் தலைவர் ரஜாத் பட்டிதார், மத்திய வரிசை வீரர்கள் ரொமாரியோ ஷெப்பர்ட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள் சற்று தெம்பைக் கொடுத்தது.

பில் சோல்ட் (0) முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

எனினும் விராத் கோஹ்லி, ரஜாத் தேவ்டத் படிக்கல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சரிசெய்தனர்.

தேவ்டத் படிக்கல் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க மேலும் 4 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.

விராத் கோஹ்லி 7 பவுண்டறிகளுடன் 32 ஓட்டங்களுடனும் க்ருணல் பாண்டியா ஒரு ஓட்டத்துடனும் ஜிட்டேஷ் ஷர்மா 5 ஓட்டங்களுடனும் டிம் டேவிட் 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (94 - 6 விக்.)

மொத்த எண்ணிக்கை 125 ஓட்டங்களாக இருந்தபோது ரொமாரியோ ஷெப்பர்ட் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

  

மேலும் 41 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது ரஜாத் பட்டிதார் 63 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

வெங்கடடேஷ் ஐயர் 29 ஓட்டங்களுடனும் புவனேஷ்வர் குமார் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நந்த்ரே பேர்கர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரிஜேஷ் ஷர்மா 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26
news-image

கூப்பர் கொனலியின் சதம் வீண்போனது; பஞ்சாபை...

2026-05-07 11:34:54
news-image

பரபரப்பான முடிவை நோக்கி தம்புள்ளை -...

2026-05-07 09:18:58
news-image

சம அளவில் மோதப்படும் தேசிய சுப்பர்...

2026-05-06 09:33:01
news-image

சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிக்கு சஞ்சு...

2026-05-06 09:27:53
news-image

லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026க்கான...

2026-05-05 23:06:59