39 விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட போட்டியில் கண்டியை முதல் இன்னிங்ஸில் வென்றது காலி

10 Apr, 2026 | 04:54 PM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற கண்டி அணிக்கும் காலி அணிக்கும் இடையிலான தேசிய சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை (09) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் மொத்தமாக 39 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது. ஆனால் கண்டி அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி விக்கெட்டை காலி அணி வீழ்த்த தவறியதால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

எனினும் முதல் இன்னிங்ஸில் காலி வெற்றிபெற்றது.

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய அப் போட்டியில் இரண்டு அணிகளாலும் சுமாரான மொத்த எண்ணிக்கைகளையே பெறமுடிந்தது.

இரண்டு அணிகளிலும் ஓஷத பெர்னாண்டோ பெற்ற 84 ஓட்டங்களே தனி நபர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகப் பதிவானது.

பந்துவீச்சில் சாமிக்க குணசேகர, இசித்த டியூ விஜேசுந்தர ஆகிய இருவரும் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

காலி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 260 (ஓஷத பெர்னாண்டோ 84, ரமேஷ் மெண்டிஸ் 70, பசிந்து சூரியபண்டார 33, சாமிக்க குணசேகர 45 - 5 விக்., துலாஜ் சமுதித்த 51 - 3 விக்.)

கண்டி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 209 (சம்மு அஷான் 52, சாமிக்க கருணாரட்ன 34, அஷேன் பண்டார 28, இசித்த டியூ விஜேசுந்தர 56 - 5 விக்., அசன்க மனோஜ் 47 - 2 விக்)

காலி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 262 (சதீர சமரவிக்ரம 72, டிலும் சுதீர 56, ஓஷத பெர்னாண்டோ 55, சாமிக்க கருணாரட்ன 28 - 3, துலாஜ் சமுதித்த 47 - 2 விக்., ஜெவ்றி வெண்டசே 57 - 2 விக்.)

கண்டி 2ஆவது இன்: -வெற்றி இலக்கு 314 ஓட்டங்கள் - 229 - 9 விக். (பவன்த வீரசிங்க 61, லஹிரு உதார 41, சொஹான் டி லிவேரா 28, ஜெவ்றி வெண்டசே 23 ஆ.இ., அசன்க மனோஜ் 60 - 3 விக்., ரமேஷ் மெண்டிஸ் 26 - 2 விக்., இசித்த டியூ விஜேசுந்தர 34 - 2 விக்.) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய இளையோர் மேசைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற...

2026-05-11 19:41:05
news-image

முன்னாள் சம்பியன் மும்பையை வெளியேற்றி முதல்...

2026-05-11 10:22:37
news-image

உர்வில் பட்டேல் 13 பந்துகளில் அரைச்...

2026-05-11 10:09:02
news-image

மாலைதீவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில்...

2026-05-10 14:12:03
news-image

ஷுப்மான் கில், சாய் சுதர்சன் துடுப்பாட்டத்திலும்...

2026-05-10 12:20:12
news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26