(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட்; விளையாட்டரங்கில் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட தம்புள்ளை அணிக்கும் கொழும்பு அணிக்கும் இடையிலான தேசிய சுப்பர் லீக் (National Super League) 4 நாள் கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை (09) வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
எனினும் தனஞ்சய டி சில்வா தலைமையிலான தம்புள்ளை அணி முதலாவது இன்னிங்ஸில் வெற்றியீட்டியது.
இரண்டாவது இன்னிங்ஸில் தம்புள்ளை சார்பாக நிஷான் மதுஷ்க, கவின் பண்டார ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காமல் சதங்கள் குவிததமை விசேட அம்சமாகும். இந்த சுற்றுப் போட்டியில் முதலாவது சதத்தைப் பெற்ற பெருமை நிஷான் மதுஷ்கவை சாருகிறது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி, நிஷான் மதுஷ்க, தனுக்க தாபரே, அஞ்சல பண்டார ஆகியோர் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 408 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பபெடுத்தாடிய கொழும்பு அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 390 ஓட்டங்களைப் பெற்றது.
சரித் அசலன்க தலைமையிலான கொழும்பு அணி சார்பாக ஐவர் அரைச் சதங்கள் குவித்தனர்.
துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆர். பிரேமதாச ஆடுகளத்தில் இரண்டு சதங்களும் 8 அரைச் சதங்களும் குவிக்கப்பட்டன.
எண்ணிக்கை சுருக்கம்
தம்புள்ளை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 408 ( நிஷான் மதுஷ்க 97, அஞ்சல பண்டார 95, தனுக்க தாபரே 56, கவிந்து பத்திரட்ன 49, அக்கில தனஞ்சய 26 ஆ.இ., ப்ரபாத் ஜயசூரிய 110 - 3 விக்., ஜனித் லியனகே 28 - 2 விக்., சமோத் பட்டகே 57 - 2 விக்.)
கொழும்பு 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 390 (ரவிந்து ரசன்த 69, சரித் அசலன்க 67, ப்ரபாத் ஜயசூரிய 54, தனஞ்சய லக்ஷான் 53, தரிந்து அமரசிங்க 52, ஜனித் லியனகே 47, ஷக்தி உதார 97 - 4 விக்., அக்கில தனஞ்சய 90 - 3 விக்.)
தம்புள்ளை 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 266 - 1 விக். (நிஷான் மதுஷ்க 107 ஆ.இ., கவின் பண்டார 100 ஆ.இ., தனுக்க தாபரே 47)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM