சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய உறவினருக்கு 15 வருட கடூழியச் சிறை

Published By: Priyatharshan

12 Sep, 2017 | 03:55 PM
image

12 வயது சிறுமி ஒருவரை பாலியல்வன்புணர்வு புரிந்த குற்றத்திற்கு 53 வயதான புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவருக்கு 15 வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

கடந்த 09.09.2012 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் தனது மனைவியின் சகோதரியின் மகளின் மகளான 12 வயது சிறுமி ஒருவரை 53 வயதுடைய உறவு முறையானவர் ஒருவர் பாலியல்வன்புணர்வு குற்றம் புரிந்துள்ளார். 

இதையடுத்து சிறுமியின் தாயார் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த நபரைக்கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். 

வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்ததுடன் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

கடந்த 29.05.2017 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வுப்பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

 சாட்சிகளின் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு நேற்றைய தினம் 11.09.2017 தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டிருந்தது..

இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனினால் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு 15 வருட கடூழியச்சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்தத்தவறின் இரண்டு வருட கடூழியச்சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டப்பணமாக 10 ஆயிரம் ரூபாவினை செலுத்துமாறும் அதை செலுத்தத்தவறின் ஒரு மாதம் சாதாரண சிறை அனுபவிக்க நேரிடும் எனத தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17