சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் 9 விக்கெட்களை வீழ்த்தி பிரேஸில் வீராங்கனை லோரா  கார்டோசோ  உலக சாதனை

10 Apr, 2026 | 01:21 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இருபாலாரிலும் 9 விக்கெட்களை வீழ்த்திய முதலாமவர் என்ற அரும்பெரும் உலக சாதனையை பிரேஸில் மகளிர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் 21 வயதுடைய லோரா கார்டோசோ நிலைநாட்டியுள்ளார்.

பொட்ஸ்வானாவில் நடைபெற்ற கலாஹாரி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் லெசோத்தோ  எதிரான போட்டியிலேயே இந்த அரிய சாதனையை லோரா கார்டோசோ நிலைநாட்டினார்.

கெபோரோன் ஓவல் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09)  நடைபெற்ற போட்டியில் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 3 ஓவர்கள் வீசிய லோரா கார்டோசோ 4 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு ஹெட் - ட்ரிக் உட்பட 9 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் மியன்மாருக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டிtயில் பூட்டான் ஆடவர் அணியின் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் சொனாம் யெஷேவுக்கு சொந்தமாக இருந்த 7 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்கள் என்ற சாதனையை லோரா முறியடித்தார்.

மொங்கோலியாவுக்கு எதிராக 2024 ஏப்ரல் மாதம் நடைபெற்ற போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ரொஹ்மாலியா ரொஹ்மாலியா ஓட்டம் எதனையும் கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி இருந்ததே மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் சாதனையாக இருந்தது.

லெசெத்தோவுக்கும் பிரேஸிலுக்கும் இடையில் நடைபெற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரேஸில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது.

லெசெத்தோ அணி 6.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதில் 7 விராங்கனைகள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

இப் போட்டியில் தனது முதலாவது ஓவரில் ஹெட் - ட்ரிக்கைப் பதிவு செய்த லோரா கார்டோசோ, 2ஆவது ஓவரில் 4 விக்கெட்களையும் 3ஆவது ஓவரில் 2 விக்கட்களையும் கைப்பற்றினார்.

இதுவரை 48 மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள லோரா கார்டோசோ, 45 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 55 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய இளையோர் மேசைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற...

2026-05-11 19:41:05
news-image

முன்னாள் சம்பியன் மும்பையை வெளியேற்றி முதல்...

2026-05-11 10:22:37
news-image

உர்வில் பட்டேல் 13 பந்துகளில் அரைச்...

2026-05-11 10:09:02
news-image

மாலைதீவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில்...

2026-05-10 14:12:03
news-image

ஷுப்மான் கில், சாய் சுதர்சன் துடுப்பாட்டத்திலும்...

2026-05-10 12:20:12
news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26