பெறுமதியான தொல்பொருட்களுடன் நால்வர் கைது

Published By: Digital Desk 1

10 Apr, 2026 | 09:29 AM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

புத்தளம் - மதுரங்குளி நகரில் தொல்பொருட்கள் மற்றும் வாகனத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுரங்குளி பொலிஸ் அதிகாரிகளினால் நேற்று வியாழக்கிழமை (09) இரவு முன்னெடுக்கப்பட்ட வாகனச் சோதனையின் போது, மதுரங்குளி நகரப் பகுதியில் வைத்து கார் ஒன்று சோதனையிடப்பட்டது. 

இதன்போது சுமார் ஒன்றரை அடி உயரமான, கல்லினால் செதுக்கப்பட்ட தாமரை மலர்ச் சிற்பம் மற்றும் சுவஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்ட பேழை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பேழைக்குள் பெறுமதியான மாணிக்கக் கற்கள் என சந்தேகிக்கப்படும் சில கற்களும் காணப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக கல்கமுவ மற்றும் மதுரங்குளி பகுதிகளைச் சேர்ந்த 22, 30, 32 மற்றும் 47 வயதுடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து கார் மற்றும் வேன் ஆகிய வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.   இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மதுரங்குளி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23
news-image

மரியா காஸ்டிலோ - அருண் ஹேமச்சந்திர...

2026-05-09 20:47:28