முகுல் சௌதரியின் ஆட்டம் இழக்காத அரைச் சத உதவியுடன் கடைசிப் பந்தில் வெற்றியீட்டியது லக்னோவ்

10 Apr, 2026 | 04:54 AM
image

(நெவில் அன்தனி)

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (09) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் லக்னோவ் சுப்பர் ஜய்ன்ட்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியின் கடைசிப் பந்தில் 3 விக்கெட்களினால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றியீட்டியது.

இதன் மூலம் தற்போது நடைபெற்றுவரும் 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் தனது நான்கு போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றியீட்டத் தவறி ஒரு புள்ளியுடன்தொடர்ந்து 9ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்த வெற்றியுடன் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ், அணிகள் நிலையில் 5ஆம் இடத்திலிருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்டெக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

ஒரு பக்கத்தில் விக்கெட்கள் வீழ்ந்துகொண்டிருக்க மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய முகுல் சௌதரி 27 பந்துகளில் 2 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஏய்டன் மார்க்ராம் (22), மிச்செல் மார்ஷ் (15) ஆகிய இருவரும் 25 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், இருவரும் 3 பந்துகளில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்

தொடர்ந்து அணித் தலைவர் ரிஷாப் பான்ட் (9), நிக்கலஸ் பூரன் (13), அப்துல் சமாத் (2), மொஹமத் ஷமி (1) ஆகியோர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (128 - 7 விக்.)

இந் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முதலாவது வெற்றியை ஈட்டப்போகிறது என இரசிகர்கள் எண்ணினர்.

ஆனால், முகுல் சௌதரி திறமையாக் துடுப்பெடுத்தாடி லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19ஆவது ஓவரில் முகுல் சௌதரி 16 ஓட்டங்களை விளாசினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு மேலும் 14 ஓட்டங்கள் தேவைப்பட  அரோராவின்   முதல் பந்தில்  ஆவேஷ் கான் ஒரு ஓட்டத்தைப் பெற்று முகுல் சௌதரிக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.

அடுத்த பந்தில் சிக்ஸ் ஒன்றை விளாசிய முகுல் சௌதரியினால் 3ஆம், 4ஆம் பந்துகளில் ஓட்டம் பெறமுடியாமல் போனது. அரோரா இரண்டு யோர்க்கர் பந்துகளை வீசி சௌதரியை திக்குமுக்காட வைத்தார்.

ஆனால் அரோராவின் 5ஆவது பந்தை சௌதரி சிக்ஸ் ஆக்கியதன் மூலம் எண்ணிக்கை சமப்படுத்தப்பட்டது.

கடைசிப் பந்தை அரோரா மிகவும் சாதுரியமாக வீசியபோதிலும் சௌதரியும் ஆவேஷ் கானும் உதிரி ஒன்றை எடுத்து தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் அனுகுல் ரோய் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வைபவ் அரோரா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதானத்தைக் கடைப்பிடித்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.

பின் அலன் மீண்டும் பிரகாசிக்கத் தவறி 9 ஓட்டங்களுடன் வெளியேறினார். (15 - 1 விக்)

எனினும் அணித் தலைவர் அஜின்கியா ரஹானே (41), அங்ரிஷ் ரகுவன்ஷி (45) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

அவர்கள் இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததுடன் மொத்த எண்ணிக்கை 111 ஓட்டங்களாக இருந்தபோது ரின்கு சிங் (4) களம் விட்டகன்றார்.

இதனைத் தொடர்ந்து கெமரன் க்றீன் (32 ஆ.இ.), ரோவ்மன் பவல் (39 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

பந்துவீச்சில் திவ்கேஷ் ரதி, மணிமாறன் சித்தார்த், ஆவேஷ் கான், பிறின்ஸ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: முகுல் சௌதரி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய இளையோர் மேசைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற...

2026-05-11 19:41:05
news-image

முன்னாள் சம்பியன் மும்பையை வெளியேற்றி முதல்...

2026-05-11 10:22:37
news-image

உர்வில் பட்டேல் 13 பந்துகளில் அரைச்...

2026-05-11 10:09:02
news-image

மாலைதீவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில்...

2026-05-10 14:12:03
news-image

ஷுப்மான் கில், சாய் சுதர்சன் துடுப்பாட்டத்திலும்...

2026-05-10 12:20:12
news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26