சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த ஒருத்தொகை மாவா போதை பக்கட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதிரடிபடையினரும், ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நேற்று மாலை கொட்டகலை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடமிருந்து பொதி செய்யப்பட்ட 12 மாவா போதை பொருளுடன் மாவா தயாரிப்பதற்காக வைத்திருந்த புகையிலை 500 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது .

மேலும் கைது செய்ப்பட்ட கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை இன்று ஹட்டன்  மாவட்ட  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்,