எம்முடைய குடும்ப உறுப்பினர்களில் யாருக்கேனும் அல்லது எம்முடைய வீடுகளில் விருந்தினர்களாக வருகை தந்தவர்களின் சிலருக்கோ இரவு நேரத்தில் உறங்கும் போது பற்களை வித்தியாசமான ஒலியுடன் கடிப்பதை நாம் பார்த்திருக்கலாம். இத்தகைய செயல்பாடு தற்காலிகமானதாக இருந்தால் தானாகவே மறையும். இவை நாட்பட்டதாக மாறும்போது பற்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள். இதனை மருத்துவ மொழியில் 'ப்ரூக்ஸிசம் ' என குறிப்பிடப்படும் இத்தகைய பாதிப்பிற்கும் நவீன சிகிச்சைகள் அறிமுகம் ஆகி பலனளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
பற்களை கடித்துக் கொள்வது, காலையில் எழுந்தவுடன் தாடை மற்றும் தலைவலி ஏற்படுவது, சீரான இடைவெளியில் அமையப் பெறாத பற்கள், தசைகள் இறுக்கமடைவதால் ஏற்படும் முக வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் இத்தகைய பாதிப்பின் காரணமாக உருவாகும்.
பொதுவாக பற்களை கடிப்பது, மன அழுத்தத்தின் காரணமாக அல்லது பதட்டம் காரணமாகவோ முகத்தில் உள்ள தசை பகுதிகள் இறுக்கமடைந்து பற்களை கடித்துக் கொள்ளும் பழக்கம் உருவாகிறது. இது பெரும்பாலும் உறங்கும் தருணத்தில் ஏற்படுவதால் நோயாளிகள் பலர் இதனை உணர்வது இல்லை. சிலருக்கு பல்லில் ஏற்படும் பிரச்சனை காரணமாகவும் இத்தகைய பற்களை கடிக்கும் பழக்கம் ஏற்படும்.
இது பற்களை சேதப்படுத்துவதுடன் வாய் வழியான சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதால் இத்தகைய பாதிப்பினை தொடக்க நிலையிலேயே துல்லியமாக அவதானித்து முறையான மற்றும் முழுமையான சிகிச்சையை பெற வேண்டும். வைத்தியர்கள் முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு இந்த செயல்பாட்டை குறைப்பதற்காக நைட் கார்டு எனப்படும் பிரத்யேக பற்களில் அணியும் உறையை அணிந்து கொள்ளுமாறு பரிந்துரை செய்வார்கள்.
பிறகு தாடை பகுதியில் ஏற்படும் இறுக்கத்தை தளர்த்துவதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சையையும் வழங்கி நிவாரணம் தருவர். இத்தகைய பழக்கத்தின் காரணமாக பற்கள் சேதமடைந்திருந்தால் அதற்கான பிரத்யேக பல் சீரமைப்பு சிகிச்சைகளையும் மேற்கொண்டு நிவாரணம் தருவர். கோப்பி, சொக்லெட் , சுயிங் கம், மது ஆகியவற்றை பாவிப்பதை முற்றாக தவிர்த்திட வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துவர்.
வைத்தியர் ப்ரீத்தி
தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM