விற்பனையாகாத காணிகளை விற்பனை செய்வதற்குரிய சூட்சம குறிப்பு

09 Apr, 2026 | 03:37 PM
image

எம்முடைய மண்ணில் இருந்து பல காரணங்களால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளில் புலம் பெயர்ந்து பலர் வசிக்கிறார்கள். இவர்களில் பலருக்கு சொந்தமான காணி இருக்கும். ஆனால் அதனை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். பலருக்கு காணியை விற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவை சாத்தியமாகாமல் தொடர்ந்து தாமதமாகி கொண்டே இருக்கும். இத்தகைய தருணத்தில் உங்களுடைய காணி விற்பனையாக வேண்டும் என்றால் அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை முன்மொழிந்திருக்கிறார்கள்.

உங்களுடைய ஜாதகத்தில் நீங்கள் எந்த ராசியை சார்ந்தவர்களோ அதாவது உங்களுடைய ஜாதகத்தில் சந்திரன் எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறாரோ அதிலிருந்து நான்காவது வீடு காணி தொடர்பான விடயங்களை குறிக்கிறது. இந்த இடத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தை -அந்த வீட்டின் அதிபதியை-  இயக்கினால் உங்களுடைய காணி விற்பனையாகும்.

உதாரணமாக உங்களுடைய ராசி கும்ப ராசியாக இருந்தால் அங்கிருந்து நான்காம் இடம் ரிஷபம் ரிஷபத்திற்கு பன்னிரண்டாம் இடம் மேஷம். நீங்கள் மேஷ ராசிக்குரிய பொருட்களையோ அல்லது விடயங்களையோ இயக்கும் போது உங்களுடைய காணி விற்பனை ஆவதற்கான அறிகுறி உண்டாகும்.

வேறு சிலர் தங்களுடைய விற்பனை ஆகாத காணியிலிருந்து கைப்பிடி அளவிற்கு மண்ணை எடுத்து அருகில் இருக்கும் ஓடும் நதி அல்லது கடல் பகுதிக்குச் சென்று அந்த மண்ணை கரைத்து விடுவர். இதனை நீங்கள் மூன்று மாதம் தொடர்ந்து செய்தாலும் உங்களுடைய காணி விற்பனையாகும்.‌

வேறு சிலர் விற்பனையாகாத காணி தொடர்பான பத்திரத்தை ஒரு பாதுகாப்பான உறையில் வைத்து, உங்களுடைய வீட்டின் வாயு மூலையின் வடமேற்குப் பகுதியில் வைத்து விடுங்கள். இதனை தொடர்ச்சியாக செய்து வந்தால்... மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதத்திற்குள் உங்களுடைய காணி விற்பனையாகும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண வசியம் நாளாந்தம் நடைபெறுவதற்கான பிரத்யேக...

2026-05-15 15:25:11
news-image

வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் சூட்சம குறிப்பு..!?

2026-05-14 17:07:31
news-image

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பதற்கான...

2026-05-13 18:05:34
news-image

தன வரவை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக...

2026-05-12 15:00:56
news-image

கேது தோஷத்தை நீக்குவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-05-11 17:02:59
news-image

கடன் தீர்வதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-05-07 14:47:36
news-image

வீட்டில் செல்வ வளத்தை மேம்படுத்துவதற்கான குறிப்பு..!?

2026-05-06 18:13:58
news-image

உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்ற பரஞ்சோதி...

2026-05-06 18:06:01
news-image

ஞான வள்ளல் பரஞ்சோதி மகானின் 126...

2026-05-05 17:38:08
news-image

ஆயுளை அதிகரிப்பதற்கான பிரத்யேக வழிபாடு..!

2026-05-02 17:01:33
news-image

சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கான வழிமுறை..!?

2026-05-01 15:39:30
news-image

மே மாத ராசி பலன்கள் -...

2026-04-30 14:02:52