(இணையத்தள செய்திப் பிரிவு )
தென்மேற்கு பருவமழை காலப்பகுதியில் அசாதாரண காலநிலை மாற்றம் ஏற்பட்டால், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வறட்சியான காலநிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனை தெரிவித்தார்.
நிலவும் இந்தச் சூழலைக் கருத்திற்கொண்டு குடிநீர் மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காக நீரை மிகவும் அவதானத்துடன் முகாமைத்துவம் செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை இம்மாதம் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், மே மாதத்தின் மூன்றாவது வாரத்தின் பின்னரே இந்த வெப்பமான சூழல் படிப்படியாகக் குறையும் எனவும் தெரிவித்தார்.
மே மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னர் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு தணிந்தாலும், அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழைவீழ்ச்சி குறைவடைந்து செப்டம்பர் வரை வறட்சி நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM