15 மாதங்களில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் புதிய தோற்றத்தில் - மாதிரிப் படங்கள் வெளியீடு!

09 Apr, 2026 | 11:34 AM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

நாட்டின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை புதுப்பித்து அழகுபடுத்தும் நோக்கில் ஒரு புதிய திட்டம் இன்று (9) ஆரம்பிக்கப்படவுள்ளது.

“இந்த நாட்டை அழகாக காண வேண்டும் என்றால், அது அழகாக தோன்ற வேண்டும்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, கோட்டை ரயில் நிலையத்தை 15 மாதங்களுக்குள் புதிய வடிவில் உருவாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டு மாதிரி படங்களை பதிவேற்றியுள்ளார்.

இந்த திட்டம் ஒரு சாதாரண மேம்பாட்டு முயற்சி அல்ல,  இது ஒரு இலக்கு மையப்படுத்திய செயல் திட்டமாக வர்ணிக்கப்படுகிறது. நீண்ட காலமாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்த பகுதிகளை முழுமையாக்கி, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற ஒரு நவீன மற்றும் அழகான நிலையமாக மாற்றுவது இதன் நோக்கமாகும்.

மேலும், பொதுமக்களுக்கு வசதியான, சீரமைக்கப்பட்ட மற்றும் கண்ணுக்கு இனிமையான சூழலை வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்படவுள்ளது. “பூர்த்தி செய்யப்படாத கோட்டையை, முழுமையான கோட்டையாக மாற்றும் முயற்சி” என இந்தத் திட்டம் விவரிக்கப்படுகிறது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட கொழும்பு புறக்கோட்டை பிரதான பஸ் நிலையம் நேற்றையதினம் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நிலையில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் இன்றையதினம் புதுப்பித்து அழகுபடுத்தும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் புதிய அடையாளத்துடன் மக்கள் முன் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36