(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலைக்கு இடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள இரு வார போர்நிறுத்த தீர்மானத்தை ஐக்கிய அரபு இராஜ்ஜிய அரசு மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் உடனடியாக அனைத்து விரோத செயல்பாடுகளையும் நிறுத்தி, ஹோர்மூஸ் நீரிணையை முழுமையாகவும், எந்த நிபந்தனையும் இன்றி மீண்டும் திறக்க வேண்டும் என்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 40 நாட்களாக இடம்பெற்ற தாக்குதல்களில், 2,819 பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டதாகவும், அவை உட்கட்டமைப்பு, எரிசக்தி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், ஈரான் தனது நடவடிக்கைகளுக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் அணு திறன், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள், இராணுவ திறன் மற்றும் தொடர்புடைய பிரதிநிதி குழுக்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து அச்சுறுத்தல்களையும் கையாளும் ஒரு விரிவான மற்றும் நீடித்த அணுகுமுறை அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் கடல் போக்குவரத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், பொருளாதார போர் மற்றும் கடல் கொள்ளை நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியம், இந்த போரில் தாம் எந்த வகையிலும் தொடர்பில்லையெனவும், இதைத் தடுக்க இருதரப்பு மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் வழியாக தீவிர இராஜதந்திர முயற்சிகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய முன்னேற்றங்களை உறுதியாகக் காக்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நிறைவேற்றிய 2026 மார்ச் 11ஆம் திகதி தீர்மானம் 2817 ஐ முழுமையாக ஈரான் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஈரானின் தாக்குதல்களை கண்டித்து, அவற்றை உடனடியாக நிறுத்துமாறு கோருகிறது.
பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுக்கும் நிலையான அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் வெளிப்படுத்தியுள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM