லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள், அமெரிக்க - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஒருபோதும் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், தங்களுக்குச் சம்பந்தமில்லாத லெபனான் விவகாரத்திற்காக இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது "முட்டாள்தனமானது" என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் புதன்கிழமை ஹங்கேரியிலிருந்து வெளியேறியபோது ஊடகவியாளர்களுக்கு தெரிவிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தில் லெபனான் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஈரான் கருதுவது ஒரு "தவறான புரிதல்" அல்லது "தவறான பரப்புரை" எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் அறிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் லெபனான் மீதான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
"அமெரிக்கா ஒன்றில் போர் நிறுத்தத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது இஸ்ரேல் மூலமாகப் போரைத் தொடர வேண்டும்; இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது" என அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று புதன்கிழமை) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் இந்தப் போரின் மிக மோசமான தினமாக மாறியுள்ளது:
லெபனான் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு, ஈரானுக்காக லெபனானைப் போருக்குள் இழுத்துவிட்டதாக உள்நாட்டில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. எனினும், ஹிஸ்புல்லாவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என ஈரான் புரட்சிகர இராணுவம் அறிவித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM