(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே எட்டப்பட்ட இரண்டு வார காலப் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையை தற்காலிகமாக மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
எனினும், பிரதான கடல் வழிப்பாதையில் கடல் கண்ணிவெடிகள் இருப்பதற்கான அபாயம் உள்ளதாகக் கூறி, இன்று (ஏப் 09) புதிய மாற்றுப் பாதைகளை ஈரான் அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையின் பிரதான போக்குவரத்து வலையமைப்பில் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்பதால், கப்பல்கள் மோதல்களைத் தவிர்க்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு ஈரானின் புரட்சிகர இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
"கடல்சார் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு இணங்கவும், கண்ணிவெடிகளில் இருந்து பாதுகாக்கப்படவும் அனைத்துக் கப்பல்களும் ஈரானால் அறிவிக்கப்பட்ட மாற்று நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளைப் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பாதைகள் ஈரானின் பிரதான நிலப்பரப்புக்கு அருகாமையில் அமைந்துள்ளதால், கப்பல்களின் நகர்வுகளை ஈரானால் உன்னிப்பாகக் கண்காணிக்க முடியும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை முற்றாக அழிப்பதாக விடுத்திருந்த 48 மணிநேரக் காலக்கெடு முடிவடைய ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
மார்ச் மாத ஆரம்பத்தில் இருந்து ஈரான் இந்த நீரிணையை முடக்கியதால் உலகளவில் எரிசக்தி விலைகள் கடுமையாக அதிகரித்தன. தற்போது தற்காலிகமாகத் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் சுமார் 2,000 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM