டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சாலையில் நேற்று மேற்­கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றில் சாத­னை படைக்கப்பட்டுள்ளது. அக்­க­ரப்­பத்­தனை பிர­தே­சத்தை சேர்ந்த பெண் ஒரு­வ­ருக்கு நான்கு மணி நேரம் மேற்­கொண்ட அறுவை சிகிச்­சையின் மூலம் இந்த சாதனை நிகழ்ந்­துள்­ள­தாக டிக்­கோயா கிளங்கன் வைத்­திய வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

தனக்கு வயிற்று வலி என நீண்ட கால­மாக அவ­தி­யுற்று வந்த இப்பெண் டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­கென சென்­றுள்ளார். இவரை பரி­சோ­தித்த வைத்­தி­யர்கள் வயிற்றில் கட்டி ஒன்று இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து இவருக்கு ஒளிக் கதிர் வீச்சு சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. இதில் இப்­பெண்ணின் வயிற்றில் பாரிய கட்டி ஒன்று இருப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இதனையடுத்து டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சாலை அறுவை சிகிச்சை வைத்­திய நிபு­ணர்­க­ள் நேற்று இந்தப் பெண்ணுக்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை மேற்­கொண்டனர். இதில் அறுவை சிகிச்­சைக்­குட்­ப­டுத்­திய பெண்ணின் வயிற்­றி­லி­ருந்து 8 கிலோ எடையுடைய கட்டியொன்று அகற்றப்பட்டுள்ளது.

சிகிச்­சைக்­குட்­ப­டுத்­திய பெண் நல­மாக இருப்­ப­தா­கவும் சிகிச்சை பாரிய வெற்றியை தந்திருப்பதாகவும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் சி.யூ. குமாரசிறி தெரிவித்தார்.