(இணையத்தள செய்திப் பிரிவு)
வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவரை களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று புதன்கிழமை (08) மதியம் களுத்துறை பஸ் டிப்போவிற்கு அருகில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, வலம்புரிச் சங்கு ஒன்றை 35 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக இருந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM