நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 5 பேர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

09 Apr, 2026 | 09:09 AM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நேற்று புதன்கிழமை (08) ஐந்துபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அநுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்பத்தகம - உதுரவ வீதியில்  காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் கல்கிரியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 70 வயதுடையவர்கள் எனவும் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, காலி நகருக்கு அருகில் கொழும்பு - காலி பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று கார் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கிங்தொட்டை பகுதியை சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகியங்கனை - தளுக்கான வீதியின் ஹொபரியாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி ;மீது மோதியதில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிராந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

மேலும் வாரியப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரம்ஹாவெவ - கட்டுபொத்த வீதியின் கல்லஹெபிட்டிய பகுதியில் கார் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த 83 வயதுடைய முதியவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-04-20 08:56:35
news-image

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள்...

2026-04-20 09:37:10
news-image

அநுராதபுரம் கவரக்குளத்தில் பொல்லால் தாக்கி ஒருவர்...

2026-04-20 09:17:31
news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14
news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54
news-image

மஹரகமவில் வீட்டிற்கு தீ வைப்பு ;...

2026-04-20 08:59:20
news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:39:39
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24