உலக சுகாதார தினம் 2026: அறிவியலுடன் ஒன்றிணைந்து சுகாதாரத்திற்காக அணிதிரள்வோம் - புதுடில்லியில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உரை

Published By: Vishnu

09 Apr, 2026 | 02:04 AM
image

விஞ்ஞான ரீதியிலான அணுகுமுறைகள் மற்றும் பலமான கூட்டுப் பொறுப்பின் மூலமே தற்கால சுகாதார சவால்களை வெற்றிகொள்ள முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகம் மற்றும் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சு என்பன இணைந்து புதுடில்லியில் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தன. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் தலைவராகவும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அங்கு விசேட உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து  உரையாற்றுகையில் ,

அறிவியலுடன் ஒன்றிணைந்து சுகாதாரத்திற்காக அணிதிரள்வோம் எனும் தொனிப்பொருளில் 2026.  உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்த முக்கிய நிகழ்வை முன்னின்று நடத்தும் இந்திய அரசுக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்துக்கும் எனது மகத்தான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டின் தொனிப்பொருள் மிக முக்கியமானது.  ஏனெனில் அறிவியலே பொதுச் சுகாதார முன்னேற்றத்தின் அடிப்படைத் தூணாகும். தொற்றாத நோய்கள் பாரிய சவாலாக உருவெடுத்துள்ள இந்தக் காலகட்டத்தில், அனைவரும் ஒற்றுமையுடனும் பலமான கூட்டுப் பொறுப்புடனும் அவற்றை முறியடிக்க ஒன்றிணைய வேண்டும்.

இலங்கையின் சுகாதாரத் துறையானது நீண்டகாலமாக முறையான கொள்கைகளின் அடிப்படையில் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறது. குறிப்பாகத் தாய் - சேய் ஆரோக்கியம், நோய்த் தடுப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் ஆகிய துறைகளில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளோம். அறிவியல், சமத்துவம் மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் ஒரு பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை இலங்கை பேணி வருகின்றது. 2026 - 2028 காலப்பகுதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான விசேட வேலைத்திட்டம்' எமது பிராந்தியத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இது மக்களை மையப்படுத்திய சுகாதாரக் கட்டமைப்பை நோக்கிய எமது தூரநோக்கினைப் பிரதிபலிக்கிறது. அதேபோல், இலங்கை 2026 - 2035 தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் தனது பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. பிராந்திய ரீதியான சுகாதார மேம்பாட்டிற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கவும், பிராந்திய உறவுகளைப் பலப்படுத்தவும் இலங்கை எப்போதும் தயாராக உள்ளது. அத்துடன், மனிதர்களின் ஆரோக்கியம் மாத்திரமன்றி விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த சூழலமைப்பின் ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ள  ஆரோக்கியம் ஒன்றே  எனும் அணுகுமுறை குறித்து உலகளாவிய ரீதியில் அவதானம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.

மேலும் இந்த நிகழ்வின் போது "சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான பனியன் (ஆலமரக்)  கட்டமைப்பு 2026–2028 வேலைத்திட்டம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பிராந்திய  பணிப்பாளரின் 2025 ஆம் ஆண்டுக்கான அறிக்கை என்பனவும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன.  தென்கிழக்காசிய பிராந்தியத்தில் வாழும் சுமார் இரண்டு பில்லியன் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான கொள்கை வகுத்தல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதே இந்த மாநாட்டின் பிரதான இலக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-14 06:42:08
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-14 05:54:23
news-image

நாட்டில் விபத்துக்களில் சிகிக்கி 1,693 பேர்...

2026-08-14 04:47:02