அமெரிக்கா- இஸ்ரேலின் சட்டவிரோத செயற்பாடுகளினால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று பகிரங்கமாக குறிப்பிடுவதற்கு ஆளும் தரப்பில் எவருக்கும் தற்றுணிபு கிடையாது - நிசாம் காரியப்பர்

Published By: Vishnu

09 Apr, 2026 | 12:37 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அமெரிக்கா- இஸ்ரேலின்  சட்டவிரோத செயற்பாடுகளினால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று பகிரங்கமாக குறிப்பிடுவதற்கு ஆளும் தரப்பில் எவருக்கும் தற்றுணிபு கிடையாது. ஈரானிய தலைமைத்துவம் மற்றும் ஈரான் மக்களால் முஸ்லிம் சமூகம் இன்று தலைநிமிர்ந்துள்ளது. ஈரானிய மக்களுக்கு சிரம் தாழ்த்தி கௌரவமளிக்கிறேன். ஈரான் நட்பு நாடு என்று அரசாங்கம் குறிப்பிட்டாலும், அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் சார்பாகவே ஆட்சியாளர்கள் செயற்படுகிறார்கள். என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தரமற்ற நிலக்கரி தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம்  அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்த விடயம்  தொடர்பில் வலுசக்தி அமைச்சரிடம் எதிர்க்கட்சியினர் முன்வைத்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆனால் கணக்காய்வாளர் நாயகம் விரிவான பதிலை வழங்கியுள்ளார்.

கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையை குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் அப்போது தரமற்ற நிலக்கரி இறக்குமதிக்கு யார் பொறுப்புக் கூற  வேண்டும் என்பது வெளிவரும்.

நாட்டின் தற்போதைய நிலைவரம் என்ற சபை ஒத்திவைப்பு பிரேரணையை ஆளும் தரப்பின் உறுப்பினர் கொண்டு வந்தார்.  ஆனால் விவாதத்தில் உரையாற்றிய ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எவரும் அமெரிக்கா - .இஸ்ரேல் ஆகிய நாடுகளின்  சட்டவிரோத செயலால் இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன என்று எவரும் சொல்லவில்லை. ஏன் இந்தளவுக்கு அச்சப்பட வேண்டும். தற்றுணிபு என்பதொன்று கிடையாதா? 

ஈரானிய தலைமைத்துவம் மற்றும் ஈரானிய மக்களால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இன்று தலை நிமிர்ந்துள்ளது. அவர்களுக்கு நான் சிரம் தாழ்ந்து கௌரவமளிக்கிறேன். ஈரானிய மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல் தமது தலைமைத்துவம், கண்ணியம் மற்றும் தாய் நாட்டை பாதுகாப்பதற்காக மனித அரண் சங்கிலியாக மாறினார்கள்.

 ஈரானிய மக்கள் தமது தாய் நாட்டை பாதுகாக்க உயிரை தியாகம் செய்ய முன்வந்த போது நாம் என்ன செய்தோம். குறைந்தபட்சம் அவர்களுக்காக நோம்பு கடைப்பிடித்தோமா, அல்லது  ஆதரவளிக்கும் கூற்றுக்களை வெளிப்படுத்தினோமா ஏதும் இல்லை.  நாட்டில் ஒருசில உலமாக்கள் வாய்மூடிக் கொண்டிருந்தார்கள். எமக்கு இந்த குற்றவுணர்வு உள்ளது.

அமெரிக்கா பக்கம் செல்லும் மத்திய கிழக்கின் முஸ்லிம் நாடுகளுக்கு ஒன்றை குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்.என்றோவொரு நாள் அமெரிக்கா - இஸ்ரேல் ஆகிய நாடுகள் உங்களையும் குழிக்குள் தள்ளும் அப்போது ஈரான் தான் உங்களை காப்பாற்ற முன்வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஈரான் நட்பு நாடு என்று அரசாங்கம் குறிப்பிட்டாலும்,அமெரிக்காவுக்கும்,இஸ்ரேலுக்கும் சார்பாகவே ஆட்சியாளர்கள்  செயற்படுகிறார்கள்.நெருக்கடியான நிலையிலும் அல்லாஹ் ஈரானை கைவிடவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36