தரம் குறைந்த நிலக்கரி; அரசுக்கு பெரும் நட்டம் - எஸ்.எம். மரிக்கார்

Published By: Vishnu

08 Apr, 2026 | 11:59 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் போது ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்துக்கு வந்து அரசாங்கத்தை தூய்மைப்படுத்துகிறார். தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். பிணைமுறி மோசடியால் ஏற்பட்ட நட்டத்தை காட்டிலும் தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஆளும் தரப்பின் உறுப்பினர்களின் முறையற்ற செயற்பாடுகளினால் நெருக்கடிக்குள்ளாகும் போது ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்துக்கு வந்து அரசாங்கத்தை தூய்மைப்படுத்துகிறார்.அரசாங்கத்தை தூய்மைப்படுத்தும் பிரதான நபராகவே ஜனாதிபதி உள்ளார்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, அதனால் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் குறிப்பிட்ட போது ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர் ஜனாதிபதி உண்மையை  ஏற்றுக்கொண்டார்.

தரமற்ற நிலக்கரி தொடர்பில் நாங்கள் கடந்த டிசெம்பர் மாதத்தில் இருந்து குறிப்பிட்டோம். நாங்கள் குறிப்பிட்ட போது அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளவில்லை. இன்று உண்மை வெளிவந்ததன் பின்னர் ' நிலக்கரியை சாப்பிட்டு பார்த்தா வாங்க முடியும்' என் று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.பிணைமுறி மோசடியால் ஏற்பட்ட நட்டத்தை காட்டிலும் தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது அவசர நிலக்கரி கொள்வனவுக்கு செல்லும் போது 420 மில்லியன் ரூபாநட்டம் ஏற்படும். இந்த தொகைய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடமிருந்தா  அறவிடுவது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை அப்போதைய ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன தோற்கடித்தது. ஆனால் நீதிமன்றம் கெஹெலிய ரம்புக்வெல்லவை தண்டித்தது. குமார ஜயகொடியின் விவகாரத்தில் இதுவே நேரிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07
news-image

46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2026-04-14 12:12:23
news-image

மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி...

2026-04-14 12:39:18
news-image

பஸ் கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட்டால் உடனே...

2026-04-14 12:38:32
news-image

லக்கலை, ரனமுரே பகுதிகளுக்கு புதிய பஸ்...

2026-04-14 11:56:26
news-image

குண்டசாலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள்...

2026-04-14 11:49:21
news-image

டித்வா புயல் இழப்பீடு தொடர்பில் புதிய...

2026-04-14 12:35:48
news-image

கண்டியில் சுவீப் டிக்கட் விற்பனை எனக்...

2026-04-14 11:50:02
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புத்தாண்டு விசேட வழிபாடுகள்:...

2026-04-14 12:31:17
news-image

இலங்கை பெண்ணைத் தாக்கிய யுக்ரைன் பெண்ணுக்கு...

2026-04-14 11:53:12