மீனவர்கள் நிவாரணம்: பல்தின படகுகளுக்கும் சம உரிமை கோரிக்கை - திலிப் வெதஆரச்சி

Published By: Vishnu

08 Apr, 2026 | 10:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சாதாரண படகு உரிமையாளர்களுக்கு லீட்டர் ஒன்றுக்கு 50 ரூபா நிவாரணம் வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளது போன்று, பல்தின படகு உரிமையாளர்களுக்கும் லீட்டருக்கு 50 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பல்தின படகு உரிமையாளர்களுக்கு ஒன்றரை இலட்சம் நிவாரணம் வழங்கி ஒன்பதரை இலட்சம் ரூபாவை சூரையாடி வருகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு நிவாரணமாக ஜனாதிபதி 10ஆயிரம் கோடி ரூபா நிவாரண பொதியொன்றை  இந்த  சபைக்கு அறிவித்திருந்தார். அதில் விவசாயிகளுக்கு உர நிவாரணம் எனவும் அஸ்வெசும நிவாரண தொகையை பெறுபவர்களுக்கான கொடுப்பனவில் சிறிய அதிகரிப்பை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதேபோன்று  பல்தின படகு கடற்றொழிலில் ஈடுபடும் படகு உரிமையாளர்களுக்கு  ஒன்றரை இலட்சம் ரூபா நிவாரணம் வழங்குவதாக எனது பெயரை குறிப்பிட்டு தெரிவித்தார்.

அதேநேரம் சிறிய படகு உரிமையாளர்களுக்கு மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றுக்கு 50 ரூபா அதிகரிக்கப்பட்டிருந்தது.பல்தின படகு உரிமையாளர்களுக்கு மாதத்துக்கு ஒருமுறை கடற்றொழிலுக்கு செல்லும் பயணத்துக்கு ஒன்றரை இலட்சம் ரூபா எரிபொருள் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். நாட்டில் 7ஆயிரம் பல்தின  படகு கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன. அதில் 1600 படகுகள் ஏற்றுமதி தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றன. இவர்களின் ஒரு  பயணம் ஒன்றரை மாத்துக்கு  உட்பட்டது அதற்காக 10, 11ஆயிரம் லீட்டர் எரிபொருள் செலவாகிறது.

என்றாலும் அரசாங்கம் பெப்ரவரி மாதம்  டீசல் விலை  272 ரூபாவால் அதிகரி்த்தது.அதன் காரணமாக ஒரு லீட்டர் டீசல் 382 ரூபாவரை அதிகரித்தது. இதன் காரணமாக பல்தின படகு ஒன்று ஒன்றரை மாத பயணத்துக்காக ஒரு லீட்டருக்கு 110 ருபா மேலதிகமாக செலவழித்துவருகிறது. அதன் பிரகாரம் அரசாங்கம் 10 ஆயிரம் லீட்டருக்கு பல்தின கடகு உரிமையாளர்களிடமிருந்து 11இலட்சம் ரூபா அறவிட்டு வருகிறது. தற்போது ஜனாதிபதி இந்த படகு உரிமையாளர்களுக்கு ஒன்றரை இலட்சம் நிவாரணம் வழங்கி ஒன்பதரை இலட்சம் ரூபாவை சூரையாடி வருகிறது. அதனால் ஜனாதிபதி நிவாரணம் வழங்க 10ஆயிரம் கோடிரூபா ஒதுக்கி இருப்பது இந்த பல்தின படகு உரிமையாளர்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தின் மூலமாகும். 

அதனால் கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கு  ஜனாதிபதி முற்படக்கூடாது, கடற்றொழிலாளர்களும்  ஜனாதிபதியின் இந்த நிவாரணத்தால் ஏமாறக்கூடாது என கேட்கிறோம். ஜனாதிபதி சாதாரண படகு உரிமையாளர்களுக்கு லீட்டர் ஒன்றுக்கு 50 ரூபா நிவாரணம் வழங்க தீர்மானித்துள்ளதுபோன்று, பல்தின படகு உரிமையாளர்களுக்கும் லீட்டருக்கு  50 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால் அது  நியாயமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் பொலிஸ்,...

2026-09-15 17:27:58
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51
news-image

செப். 25 முதல் ஒக். 1...

2026-09-15 19:06:41
news-image

தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் நிலவும்...

2026-09-15 19:04:43
news-image

நாடு ஒரு புதிய அரசியல் கலாசாரத்துடன்...

2026-09-15 19:01:48