19இன்கீழ் பெண்கள் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்: அசேனியின் 5 விக்கெட் குவியல் பலனற்றுப் போனது; ஆஸி.யிடம் இலங்கை தோல்வி

Published By: Vishnu

08 Apr, 2026 | 08:49 PM
image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன் இயன் ஹீலி விளையாட்டரங்கில் புதன்கிழமை (08) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மும்முனை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் ஒரு விக்கெட்டினால் இலங்கை தோல்வி அடைந்தது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்துடனான போட்டியில் 52 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கைக்கு இன்றைய போட்டி முடிவு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இந்தப் போட்டியில் கண்டி மஹாமாயா கல்லூரி வீராங்கனை அசேனி தலகுனே 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த போதிலும் அது பலன் தராமல் போனது. 17 வயதான அசேனி தலகுனே, இளையோர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பதிவுசெய்த முதலாவது 5 விக்கெட் குவியல் இதுவாகும்.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரி வீராங்கனை நெத்மி உப்பேஷ்காவும் திறமையாக பந்துவீசி 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்

அப் போட்டியில் 174 ஓட்டங்களைத் தக்கவைக்க கடுமையாக முயற்சித்த இலங்கை கடைசி விக்கெட்டை வீழ்த்த தவறியதால் தோல்வியைத் தழுவியது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீராங்கனைகளான சஞ்சனா காவிந்தி (18), விமோக்ஷா பாலசூரிய (25). உமயங்கனா பீரிஸ் (20) ஆகிய மூவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை நல்ல நிலையில் இட முயற்சித்தனர்.

ஆனால், அவர்கள் ஆட்டம் இழந்ததும் சீரான இடைவெளியில் இலங்கையின் விக்கெட்கள் சரிந்தன.

மத்திய வரிசையில் ஷஷினி கிம்ஹானி (19), பின்வரிசையில் யேஷாலி ஜித்தாரா (16), சமோதி ஹேரத் (20 ஆ.இ.) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினர்.

எனினும், இலங்கையின் மொத்த எண்ணிக்கையில் 35 உதிரிகளே அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது.

பந்துவீச்சில் மியா பார்விக் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஐரா ஏரி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

175 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய பெண்கள் அணி 43.1 ஓவரக்ளில் 9 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலியாவின் இந்த வெற்றியில் பெரும் பங்காற்றியவர் இந்திரா பனெல்லி ஆவார். அவர் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 56 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திரா பனெல்லி, அலிசா டேர்மோடி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.

ஆனால், அதன் பின்னர் கட்டுப்பாட்டுடன் பந்துவிசிய இலங்கை பந்துவீச்சாளர்கள் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்களை வீழ்த்தி போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினர்.

எனினும் இறுதியில் அலிசா டேர்மோடி ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களைப் பெற்று 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

துடுப்பாட்டத்தில் ஆய்லா ஜோன்சன் (20), ஷைலோ ஜூலியன் (18), அணித் தலைவி எமிலி பவல் (16) ஆகியோரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் அசேனி தலகுனே 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நெத்மி உபேஷ்கா 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2026-04-14 03:51:27
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில்...

2026-04-13 22:26:01
news-image

தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில்...

2026-04-13 16:00:02
news-image

உசைன் போல்ட் சாதனை முறியடிப்பு: 18...

2026-04-13 13:33:42
news-image

மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் றோயல்...

2026-04-13 01:52:00
news-image

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸை சகலதுறைகளிலும் விஞ்சிய...

2026-04-12 21:56:11
news-image

20இன் கீழ் பெண்களுக்கான 10 கி.மீ. ...

2026-04-12 20:00:19
news-image

நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் சஞ்சு செம்சன்...

2026-04-12 00:43:44
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி 3ஆவது வெற்றியை...

2026-04-11 23:46:46
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடான ஒருநாள் தொடரை ...

2026-04-11 23:37:22
news-image

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு 3ஆவது நேரடி...

2026-04-11 00:50:58
news-image

ஒலிம்பிக் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை...

2026-04-10 17:20:37