பதிவு செய்யப்படாத நிறுவனத்திடம் நிலக்கரி கொள்வனவு: அரசாங்கத்தை சாடுகிறார் நாமல் ராஜபக்ஷ

08 Apr, 2026 | 05:53 PM
image

எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்த  நிறுவனம் பதிவு செய்யப்படாததே. பரிசோதனை அறிக்கையும் தவறானது. ஏற்பட்ட  நட்டத்தை  இப்போது மக்கள் மீது சுமத்துகின்றனர். அந்த நிறுவனத்தை பாதுகாப்பதை  அரசாங்கம் நிறுத்த வேண்டும்.  அரசாங்கம் பொதுமக்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதில்லை. ஊழல் மோசடிகளை மூடி மறைக்க முயற்சிக்க வேண்டாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார ரீதியில்  பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு   நிவாரணம் வழங்கல் தொடர்பில் இப்போது  குறிப்பிடப்படுகிறது. இதேபோன்றே கடந்த வருடத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் தமிழ் மற்றும்  சிங்கள புத்தாண்டுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதியொன்றை வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அந்தப் பொதி கிடைக்கவில்லை.

அதேபோன்று டித்வா  சூறாவளியின் போதும் கூறினர். தகரமொன்று பறந்தால் 10 இலட்சம் ரூபா வழங்குவதாகவும்,வீட்டுக்கு 50 இலட்சம் ரூபா வழங்குவதாகவும் கூறப்பட்டது. அதேபோன்று நிழ்வு நடத்தி வழங்கப்பட்ட காசோலையும் பணமின்றி மீளத் திரும்பிவிட்டது. இவ்வாறு யாரை ஏமாற்றுகின்றீர்கள். ஏதோ நிவாரணம் வழங்குவதாக கூறினாலும் அது மக்களுக்கு கிடைக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.

வெற்  மற்றும் ஏனைய வரிகளை நீக்குவதாக கூறினர். ஆனால் இப்போது வரிக்கு மேல் வரியை அறவிடுகின்றனர்.  சேர்பெறுமதி வரியானது சிறிய வியாபாரிகளை பாதுகாக்கவே இருக்கின்றது. ஆனால் உங்களின் வரிக்கொள்கையில் இப்போது பெரிய கோடீஸ்வர வர்த்தகர்கள் மட்டுமே நன்மை பெறுகின்றனர். இப்போது விவசாயிகளுக்கு நிவாரணங்கள் கிடைப்பதில்லை. நீங்கள் கிராமங்களுக்கு சென்றால் அங்கு மக்களின் பதில்களை பார்க்கலாம்.

சில பொருட்களின் விலைகள் 300 வீதத்தால் அதிகரித்துள்ள போதும் விவசாயியின் வருமானம் அதிகரிக்கப்படவில்லை. அரிசி வெளிநாட்டில் இருந்து கொண்டுவரத் தேவையில்லை என்று கூறினர். ஆனால் அரிசியை வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வருகின்றனர். யாரை ஆளும் தரப்பினர் ஏமாற்றப் போகின்றீர்கள். சில நிவாரணங்களை மே மாதத்தில் வழங்குவதாக கூறியுள்ளீர்கள். ஏன் இதனை புத்தாண்டு காலத்தில் வழங்க முடியவில்லை.

மத்தியக் கிழக்கில் யுத்தம் ஏற்படும் போது இங்கு தேவையான எரிபொருள் இருக்கின்றது என்று அரசாங்கம் குறிப்பிட்டது. இறுதியில் என்ன நடந்தது. மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என்றார்கள். ஆனால் அது நடக்கின்றது. இப்போது நிலக்கரி தொடர்பான பிரச்சினை இருக்கின்றது. அது தொடர்பான மனுக் கோரிக்கையில் பிரச்சினை உள்ளதாக கூறியுள்ளார். அதன் தரம் தொடர்பில் பார்த்தால் என்ன நடந்துள்ளது என்பதனை புரிந்துகொள்ளலாம்.

 நிலக்கரி கொண்டுவந்த நிறுவனம் பதிவு செய்யப்படாததே. பரிசோதனை அறிக்கையும் தவறானது. இந்த நஷ்டத்தை இப்போது மக்கள் மீது சுமத்துகின்றனர். இப்போதாவது அந்த நிறுவனத்தை பாதுகாப்பதை நிறுத்துங்கள். இந்த அரசாங்கம் பொதுமக்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதில்லை. ஊழல் மோசடிகளை மூடி மறைக்க முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03