50% மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்: நிலக்கரி மோசடியே காரணம் - சுஜீவ சேனசிங்க

08 Apr, 2026 | 05:53 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின்  நிலக்கரி மோசடி காரணமாக எதிர்காலத்தில் நூற்றுக்கு 50வீத மின்சார நெரு்க்கடி ஏற்படும் நிலை ஏற்படும் அபாயம் இருக்கிறது.  மத்திய கிழக்கு யுத்தத்தை அடிப்படையாகக்கொண்டு  எந்த  நாடும் மின்சார கட்டணத்தை அதிகரிக்காத நிலையில் எமது நாட்டில் மாத்திரமே மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தரம் குறைந்த நிலக்கரி மோசடியை மறைப்பதற்கே அரசாங்கம் இதனை மேற்கொண்டுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

ஹர்மூஸ் நீரிணை மூடப்படடிருந்த நிலையிலும் ஏப்ரல் மாதம்வரை எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவே அரசாங்கம் தெரிவித்து வந்து.

அவ்வாறு எரிபொருள் இருக்குமாக இருந்தால்  எரிபொருள் விலை அதிகரிக்க தேவை ஏற்பட்டிருக்காது. இவ்வாறான நிலையில் எவ்வாறு  நாட்டை முகாமைத்துவம் செய்வது என  இந்தியாவிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஜனாதிபதியும்  என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப்போயுள்ளார்.

உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் ஆசியாவில் அதிக மின்சார கட்டணம் அதிகரித்த நாடு, நூற்றுக்கு 33 வீதமானவர்களுக்கு முறையான சாப்பாடு  இல்லை. இளைஞர்களுக்கு தொழில் இல்லை. 290 ரூபாவுக்கு இருந்த டொலர் தற்போது 315 ரூபா.எரிபொருள் விலை அதிகரிப்பில் உலகில் 3ஆவது இடத்தில் இலங்கை நூற்றுக்கு 35வீதம். இதுதன் இவர்கள் செய்த விடயங்கள்.

அதனாலே இவர்களுக்கு அனுபவம் இல்லை, போராட்டம் செய்ய மாத்திரமே முடியும் என நாங்கள் தெரிவித்து வந்தாேம். சம்பூரை ஆரம்பிப்பதற்கு இடமளிக்கவில்லை. அதனால் பிரபாகனும் மக்கள் விடுதலை முன்னணியுமே நாட்டை அழித்தன. நாட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவிடாமல்  இவர்களே தடுத்துவந்தார்கள்.

எரிபொருள் விலையை குறைப்பதாகவும் அரிசி இறக்குமதி செய்வதில்லை என்றே தெரிவித்தார்கள். ஆனால் எரிபொருள் விலை அதிகரிப்பில் இலங்கையை 3ஆவது இடத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. தொடர்ந்து அரிசி இறக்குமதி செய்து வருகிறார்கள். அதனால் அன்று ஜனாதிபதி உள்ளிட்ட இவர்கள் தெரிவித்த விடயங்களுக்கு மாற்றமாகவே செயற்பட்டு வருகிறார்கள். நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக நாங்கள் தெரிவித்தபோது, அதனை தொடர்ந்து மறுத்துவந்தார்கள். இறுதியில் ஜனாதிபதி அதனை ஏற்றுக்காெண்டுள்ளார்.

நிலக்கரி மோசடியை மறைப்பதற்கு  பாரியளவில் முயற்சித்தார்கள். ஆனால் தற்போது கணக்காளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையில் மோசடி இடம்பெற்றுள்ளமையை உறுதி செய்திருக்கிறது.

பதிவு செய்யப்படாத நிறுவனத்துக்கே நிலக்கரி கொள்வனவுக்கு  அனுமதி வழங்கி இருக்கிறது. அதேபோன்று  நிலக்கரி தரம் தொடர்பான பரிசோதனை அறிக்கையை வெளியிட்டிருப்பதும் அது தொடர்பில் ஆரம்ப தகுதிகளை பூரணப்படுத்தாத நிறுவனம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நிலக்கரி மோசடியினால் நாட்டுக்கு  40 பில்லியனுக்கும் அதிகம் நட்டம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி கொண்டுவராமல்  40 நாட்கள் வரை தடைப்பட்டிருந்ததாலே எமக்கு மின்சார கட்டணம் அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது. இந்தியாவிலோ பாகிஸ்தானிலாே மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் அவரச நிலக்கரி கேள்விக்கோரல் விடுக்கப்பட்டபோது, அதனையும் பகுதியில்லாத நிறுவனத்துக்கே வழங்கி இருக்கிறது. ஊழல் சுட்டெண்ணில் 85ஆவது இடத்தில் இருந்த இலங்கை 107ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. 

அதனால் அரசாங்கத்தின்  நிலக்கரி மோசடி காரணமாக எதிர்காலத்தில் நூற்றுக்கு 50வீத மின்சார நெரு்க்கடி ஏற்படும் நிலை ஏற்படும்.  மத்திய கிழக்கு யுத்தத்தை அடிப்படையாகக்கொண்டு  எந்த  நாடும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. என்றாலும் தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்வதற்கே மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும்...

2026-04-16 15:49:12
news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09