எலிபன்ட்டயாசிஸ் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை.

08 Apr, 2026 | 04:58 PM
image

உலகம் முழுவதும் 120 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் எலிபன்ட்டயாசிஸ் எனும் யானைக் கால் வீக்கம் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாகவும், இதில் 36 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நாட்பட்ட பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டில் யானைக்கால் வீக்க பாதிப்பு இல்லாத நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டில் குறைவான எண்ணிக்கையில் இத்தகைய பாதிப்பிற்கு ஆளான நோயாளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் இத்தகைய பாதிப்பிற்கு சுய மருத்துவத்தையோ அல்லது மாற்று மருத்துவத்தையோ மேற்கொள்ள கூடாது என்றும், முறையான முழுமையான ஆங்கில மருத்துவத்திலான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஒருவகையினதான நுளம்பு கடிப்பதால் இத்தகைய தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும், இத்தகைய தருணத்தில் கால், கை, தோல் ஆகிய பகுதிகளில் உள்ள நிணநீர் மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். மேலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கை, கால் ஆகியவை யானையின் கால்களை போல் பெரிதாகவும், அப்பகுதியில் உள்ள தோல் கடினமானதாகவும் மாற்றம் பெறுகிறது. இது நிணநீர் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி வீக்கம் மற்றும் திசு பாதிப்பையும் உண்டாக்குகிறது. 

லிம்பாடிக் பைலேரியாசிஸ் என்றும் மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு எம்முடைய சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திட வேண்டும் என்றும், குறிப்பாக நுளம்புகள் உற்பத்தியாவது தடுத்திட வகை செய்திட வேண்டும் என்றும் இதற்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இத்தகைய பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இத்தகைய பாதிப்பை தொடக்க நிலையில் அவதானித்தால்... அவர்களுக்கு மருந்தியல் சிகிச்சை - இயன் முறை சிகிச்சை - பிரத்யேக மசாஜ் சிகிச்சை - ஆகியவற்றின் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்கலாம். மேலும் இவர்கள் எம்மாதிரியான வாழ்க்கை நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதியை எப்படி பராமரிப்பது குறித்த நடைமுறையையும் வைத்தியர்கள்  விவரிப்பர். அதனை முழுமையாக கடைப்பிடித்தால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம்.

வைத்தியர் முஹம்மது இப்ராஹிம் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒவ்வாமை பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-09-15 14:44:25
news-image

மைக்சுரிஷன் சின்கோப் எனும் திடீரென்று ஏற்படும்...

2026-09-14 15:28:54
news-image

ஓரோமாண்டிபுலர் டிஸ்டோனியா எனும் பாதிப்பிற்குயிய நவீன...

2026-09-12 15:08:19
news-image

அயோர்ட்டாபைஃபெமரல் எனும் கால் ரத்த நாள...

2026-09-11 17:01:49
news-image

இளம் வயதினருக்கு ஏற்படும் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய்...

2026-09-10 14:25:35
news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39