பாதிக்கப்பட்டுள்ள மாந்தை கால்நடை வளர்ப்பாளர்கள்

Published By: Digital Desk 7

12 Sep, 2017 | 11:46 AM
image

மாந்தை, கிழக்கு பிரதேச மக்கள் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்டு காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் நெஸ்லே நிறுவனத்திற்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர்.

நெஸ்லே நிறுவனம் தொடர்ந்து இரு வேலை பாலையும் மக்களிடம் கொள்வனவு செய்து வந்ததனால் மக்கள் தங்கள் நாளாந்த வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் நோக்குடன் கடன்களை பெற்று அதிக மாடுகளை கொள்வனவு செய்துள்ள நிலையில் நெஸ்லே நிறுவனம் மாலை நேரப்பால் கொள்வனவை திடீரென நிறுத்திக்கொண்டுள்ளது.

நெஸ்லே நிறுவனம் பால் கொள்வனவை நிறுத்திக்கொண்டமையால் பாண்டியன்குளம், செல்வபுரம், சிதம்பரபுரம் உட்பட பல கிராம மக்கள் மாலை நேரப் பாலை என்ன செய்வதென்று தெரியாது திண்டாடிக்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

"பாலின் வருமானத்தினை நம்பி தவணை முறையில் பெற்றுக்கொண்ட குளிரூட்டிக்கான மாதாந்த வட்டிப்பணத்தினையும் அதிக பாலை கரப்பதற்காக விலையுயர்ந்த தரமான பால் மாடுகளை வாங்குவதற்காக வங்கியில் பெற்ற கடனையும் செலுத்த முடியாமல் உள்ளோம். கடன் சுமை அதிகரித்தால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளுவோம்" என தெரிவித்தனர்.

பால் கொள்வனவு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாண முதலமைச்சர், வடமாகாண பிரதி அவைத்தலைவர்,  வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர், மாந்தை கிழக்கு கால்நடை வைத்திய அதிகாரி ஆகியோருக்கும்  நெஸ்லே நிறுவன பணிப்பாளருக்கும் தங்களது நிலையை சுட்டிக்காட்டி கடிதங்களை அனுப்பிவைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18