அல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணியில் தயாராகும் 'ராக்கா'

08 Apr, 2026 | 04:54 PM
image

இந்திய சினிமாவின் சர்வதேச முகமாக ஒளிரும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படத்திற்கு 'ராக்கா' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று அவருடைய ரசிகர்களுக்காக அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்து அதனை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்..

பான் இந்திய இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'ராக்கா' திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர் , ராஷ்மிகா மந்தானா , ஜான்வி கபூர் , ரம்யா கிருஷ்ணன்,  யோகி பாபு,  ஜிம் ஷெர்ப் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி .கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஃபேண்டஸி கொமர்சல் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று அவருடைய ரசிகர்கள் கொண்டாடுவதற்காக இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் அல்லு அர்ஜுன் மனித உருவமும், மிருகத்தின் கைகளும் கொண்ட வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுவதும்... 'ராக்கா' என்றால் பாதுகாவலன் என்ற பொருளையும் வழங்குவதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right