தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி வெள்ளி விழா ஆண்டை கடந்து பிரபல நட்சத்திரமாக மின்னும் நடிகர் பிரசாந்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'ரஞ்ஜன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டது.
இயக்குநர்- நடிகர்- தயாரிப்பாளர் -என பன்முக திரை ஆளுமை பெற்ற தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும்' ரஞ்ஜன்' திரைப்படத்தில் பிரசாந்த், ஹரி பாபு , பிரியங்கா ராஜகுமாரன், கிரண், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரவி யாதவ் ஒலிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சட்டத்தரணியின் வாழ்வியலை மையப்படுத்தி கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாந்தி தியாகராஜன் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ப்ரீத்தி தியாகராஜன் வழங்குகிறார்.
நடிகர் பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரை உலகின் முன்னணி ஆளுமைகள் பலரும் பங்கு பற்றி பிரசாத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
'ரஞ்ஜன் 'படத்தில் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தருமான ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் ஹரிபாபு கதையின் நாயகனாகவும், நடிகை தேவயானி ராஜகுமாரனின் மகளான பிரியங்கா ராஜகுமாரன் கதையின் நாயகியாகவும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். இவர்களுக்கும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பிரசாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'ரஞ்ஜன்' திரைப்படம் - தெலுங்கு மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற 'கோர்ட்' எனும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM