உற்சவ மண்டபக் கட்டணங்கள் மற்றும் உணவு விலைகள் 15 வீதத்தால் அதிகரிப்பு: இன்று முதல் அமுல்!

08 Apr, 2026 | 05:42 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

உலகளாவிய ரீதியில் நிலவும் யுத்த சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, உற்சவ மண்டபக் கட்டணங்கள் மற்றும் உணவு விநியோகக் கட்டணங்களை இன்று (08) முதல் 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டப உரிமையாளர்கள் மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சீதுவை பகுதியில் இன்று புதன்கிழமை  (08) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன ,

உணவு மற்றும் ஏனைய வசதிகளுக்கான கட்டணங்கள் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பொறுப்பேற்கப்பட்ட முன்பதிவுகளுக்கும்  10 சதவீத விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும். உணவுப் பொருட்கள், எரிவாயு  மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது. வற் (VAT) வரி 20.50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கியுள்ள சுமார் 10 இலட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என அவர் சுட்டிக்காட்டினார்.

மின்வெட்டு, டீசல் தட்டுப்பாடு மற்றும் பராட்டே சட்டத்தினால்  ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாகத் தமது சங்க உறுப்பினர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், பராட்டே சட்டத்தை இந்த வருட இறுதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் ஆலோசகர் சலியா ரவீந்திரா, முன்னாள் செயலாளர் அஞ்சனா ஜெயகொடி, துணைத் தலைவர் நயனா பிரசங்க ஜீவந்தரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03
news-image

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து:...

2026-04-16 15:45:20