மோசடி தொடர்பில் அறிக்கை வெளியிட்டவர்கள் இன்று பொருளாதார மேம்பாடு பற்றி பேசுகிறார்கள் ; வசந்த சமரசிங்க

08 Apr, 2026 | 05:41 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்களுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கிய 100 பில்லியன் ரூபாவும் போதாது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். பிணைமுறி மோசடியாளர்கள்,அந்த மோசடி தொடர்பில் அறிக்கை வெளியிட்டவர்கள்  இன்று பொருளாதார மேம்பாடு பற்றி பேசுகிறார்கள் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   புதன்கிழமை (08) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய மோதல் நிலைமையில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம்  அவதானம் செலுத்தியுள்ள நிலையில், அந்த மோதல்களை கொண்டு அரசாங்கத்தை எவ்வாறு  நெருக்கடிக்குள்ளாக்கலாம் என்று எதிர்க்கட்சியினர்  சிந்திக்கிறார்கள்.

மத்திய கிழக்கில் மோதல் நிலைமை ஏற்பட்டவுடன் நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள  தீர்மானித்துள்ளோம். அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது.

பொருளாதார நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்க ளுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கிய 100 பில்லியன் ரூபாவும் போதாது எ ன்று   எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். பிணைமுறி மோசடியாளர்கள், அந்த மோசடி தொடர்பில் அறிக்கை வெளியிட்டவர்கள்  இன்று பொருளாதார மேம்பாடு பற்றி பேசுகிறார்கள்.

 தற்போதைய  நெருக்கடியான நிலைமையை தமது அரசியல் இலாபத்துக்காக  பயன்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது. ஆகவே தற்போதைய இக்கட்டான நிலைமையை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07
news-image

46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2026-04-14 12:12:23
news-image

மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி...

2026-04-14 12:39:18
news-image

பஸ் கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட்டால் உடனே...

2026-04-14 12:38:32
news-image

லக்கலை, ரனமுரே பகுதிகளுக்கு புதிய பஸ்...

2026-04-14 11:56:26
news-image

குண்டசாலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள்...

2026-04-14 11:49:21
news-image

டித்வா புயல் இழப்பீடு தொடர்பில் புதிய...

2026-04-14 12:35:48
news-image

கண்டியில் சுவீப் டிக்கட் விற்பனை எனக்...

2026-04-14 11:50:02
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புத்தாண்டு விசேட வழிபாடுகள்:...

2026-04-14 12:31:17
news-image

இலங்கை பெண்ணைத் தாக்கிய யுக்ரைன் பெண்ணுக்கு...

2026-04-14 11:53:12