புதுக்குடியிருப்பில் சிறுத்தை கொலை செய்யப்பட்டு பல் விற்பனை ; இருவர் கைது

08 Apr, 2026 | 05:38 PM
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தை கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.  

முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது, இலங்கையில் அரிதாகக் காணப்படும் சிறுத்தை ஒன்றை கொன்று, அதன் நான்கு கால்களையும் வீட்டுவளவில் புதைத்து, பற்களை விற்பனை செய்திருப்பது கண்டறியப்பட்டன. 

குறித்த சிறுத்தைப்பற்களை ரூபாய் 110,000க்கு வாங்கிய வர்த்தகர் ஒருவரும், அதற்குத் துணைநின்ற மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாக உள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும்...

2026-04-16 15:49:12
news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09