சர்வதேச புற்தரை ஆடுகளத்துக்கான நிபுணர் பிரட் வப்டிஸ் இலங்கைக்கு வருகை ; வடக்கு, கிழக்கில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

08 Apr, 2026 | 04:26 PM
image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய வீரர்களை இனங்காணும் விதமாக மட்டக்களப்பு மாவட்ட கோட்டை முனை விளையாட்டு கிராம கிரிக்கெட் மைதானத்துக்கு சர்வதேச புற்தரை ஆடுகளத்துக்கான நிபுணர் பிரட் வப்டிஸ் முதல் முறையாக இலங்கைக்கு செவ்வாய்கிழமை (07)  விஜயம் செய்தார்.

அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ், கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானத்தை பராமரிப்பதற்கு இலங்கையில் முதல் தடவையாக 3 கோடி பெறுமதியான இயந்திரத்தை கையாள்வது தொடர்பான பயிற்சிகளை, இரண்டு வாரங்களாக மைதானத்தில் தங்கியிருந்து பயிற்சிகளை வழங்கவுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இவ்விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருப்பதனால் வட கிழக்கு மாகாணத்தில் பிரதேச இளைஞர்களை சிறந்த கிரிக்கெட் வீரர்களாக  மாற்றுவதற்கும் தேசிய கிரிக்கெட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும்  பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றன. 

இதன்போது கருத்து தெரிவித்த பிரட் வப்டிஸ், சர்வதேச தரத்தில் இந்த மைதானம் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் இருந்து முத்தையா முரளிதரன் முதலான ஆற்றல் மிகுந்த கிரிக்கெட் வீரர்களைப் போன்ற புதிய வீரர்கள் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.

அண்மையில் வேகப்பந்து வீச்சாளர்களை இனங்காணும் செயல்பட்டறை   நடத்தப்பட்டிருந்தது. அதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வீரர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும்...

2026-04-16 15:49:12
news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09