வடமாகாணத்தின் வணிக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சிக்காக 'வடக்கு மாகாண வணிகக் கொள்கை' உருவாக்கம்

08 Apr, 2026 | 05:37 PM
image

வடமாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான 'வடக்கு மாகாண வணிகக் கொள்கை' ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்காகவும் கூட்டத்தின் முடிவில் 3 விசேட உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்  செவ்வாய்க்கிழமை (07) ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

குறித்த கூட்டமானது வடக்கு மாகாணத்தின் பொருளாதாரச் சுழற்சியை மேம்படுத்துவதற்காக அரச, தனியார், நிதி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கிடையில் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக  காணப்பட்டது.

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது மாகாணத்தின் வணிகச் சூழலை ஆரோக்கியமானதாக்குவதற்குத் தடையாக உள்ள பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

மாகாணத்தின் வளங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்பான தரவுகள் சேகரிப்பு முறையாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

வங்கித்துறையினருக்கும் உள்ளூர் தொழில்முயற்சியாளர்களுக்கும் இடையில் இடைவெளி காணப்படுவதால், முயற்சியாளர்கள் நிதியுதவிகளைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் ஆழமாக விவாதிக்கப்பட்டது.

மாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான 'வடக்கு மாகாண வணிகக் கொள்கை' ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும், எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்காகவும் கூட்டத்தின் முடிவில் 3 விசேட உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.

மாகாணத்தின் வர்த்தகம், வளங்கள் மற்றும் தொழில்முயற்சிகள் தொடர்பான தரவுகளை முறையாகச் சேகரித்து ஒழுங்கமைப்பதற்கான குழு.

வடக்கு மாகாணத்திலிருந்து எந்தெந்தத் துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் குழு.

தற்போதைய உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலால் வடக்கு மாகாணத்திலுள்ள தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்களை முன்கூட்டியே ஆராய்ந்து, அவற்றைத் தணிப்பதற்கான உத்திகளை வகுக்கும் குழு.

இந்தக் கூட்டத்தில் மாகாண அரச உயர்மட்ட அதிகாரிகள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு வடக்கு மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தமது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03