பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் புகை­யி­ரத நிலைய மேடையில் வைத்து தனது மனை­வி­யையும் இரு பிள்­ளை­க­ளையும் சுட்டுக்கொன்ற  பின் னர் தன்­னைத்­தானே சுட்டு தற்­கொலை செய்து கொண்ட விப­ரீத சம்­பவம் பிரான்ஸில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

 பாரிஸ் நகரின் வடக்கே 70 மைல் தொலை­வி­லுள்ள நோயன் பிராந்­தி­யத்தில்  இடம்­பெற்ற இந்தப் படு­கொ­லை­க­ளுடன் தொடர்­பு­டைய பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பாரிஸ் நக­ரி­லுள்ள பொலிஸ் தலை­மை­ய­கத்தில் பணி­யாற்­று­பவர் எனக் கூறப்­ப­டு­கி­றது.  அவர் தனது பணிக்கு தனக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த துப்­பாக்­கியைப் பயன்­ப­டுத்­தியே இந்த சூட்டை நடத்­தி­யுள்ளார். தனது மனைவி, தனது பிள்­ளை­க­ளையும் அழைத்துக்கொண்டு பிரிந்து செல்­வ­தாக கூறி­விட்டு புறப்­படத் தயா­ரா­ன­தை­ய­டுத்தே சின­ம­டைந்த அந்தப் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் சூட்டை நடத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­ச­மயம் அந்த தம்­ப­தி­யரது ஏனைய 3 பிள்­ளைகள்  இந்த சம்­ப­வத்தில்  அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர் தப்­பி­யுள்­ளனர்.  இந்த சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களில் அந்த தம்­ப­தியின்  5 வயது இரட்டைப் பிள்­ளை­களில்  ஒரு பிள்ளை உள்­ள­டங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இது தொடர்பில் விசா­ர­ணையை மேற்­கொண்­டுள்­ள­தாக தெரி வித்த உள்ளூர் விசாரணையாளர் வேர்ஜின் ஜிராட், மேற்படி சம்பவம் தீவிரவாதத்துடன் தொடர்புள்ளதா இல்லையா என உறுதிப்படுத்த மறுத்துள்ளார்.