முதல் போட்டியில்  இந்தியா சிறப்பு வெற்றி

Published By: MD.Lucias

26 Jan, 2016 | 07:22 PM
image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது-20 ஓவர் போட்டியில் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய  அணி வெற்றி பெற்றது.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.

  இந்த நிலையில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட இருபது-20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது இருபது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் பிஞ்ச், இந்தியாவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். 

இதன்படி, முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி, விராட் கோலி அதிரடி ஆட்டம் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால், நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை சேர்த்தது. இதையடுத்து 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி மிரட்டியது.

தொடக்க வீரர் பிஞ்சு மற்றும் வோர்னர் அதிரடி துவக்கத்தை அந்த அணிக்கு கொடுத்தனர். இருப்பினும் இந்த ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 5.1 ஓவரில் வோர்னர் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில், பும்ரா பந்தில் கோலியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் பிஞ்சு-ஸ்மித் ஜோடி சிறிது அதிரடி காட்டினாலும், அஷ்வின்  பிஞ்சு (44 ஓட்டங்கள்)ஐ வெளியேற்றினார். 

இதையடுத்து அவுஸ்திரேலிய அணியின் ஓட்டவேகத்தை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதனால், நெருக்கடி ஏற்பட அவுஸ்திரேலிய அணி வீரர்கள் ஓட்டம் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர்.  

ஸ்மித்(21) ஹெட் (2), லின் (17), வொட்சன் (12) வேட் (5) என முண்ணனி வீரர்கள் வரிசையாக அரங்கு திரும்பினர். 

கடைசி ஓவரில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 38 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அதேவேளையில் ஒருவிக்கெட் மட்டுமே இருந்ததால் ஆட்டம் முழுவதுமாக இந்தியா பக்கம் திரும்பியது.  

இறுதியில் 19.3 ஓவரில் அவுஸ்திரேலிய அணி 151 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன் மூலம்  இந்திய அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. 

இந்திய அணியில் அதிகபட்சமாக  பும்ரா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின், ஜடேஜா, பாண்டயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட இருபது-20 ஓவர் போட்டித்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2- வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) மெல்போர்னில் நடைபெறுகிறது.

 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23