(நெவில் அன்தனி)
பிறிஸ்பேன் இயன் ஹீலி ஓவல் விளையாட்டரங்கில் இன்று (07) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணியை 52 ஓட்டங்களால் இலங்கை பெண்கள் அணி இலகுவாக வெற்றிக்கொண்டது.
திலக்கரட்ன டில்ஷானின் மகள் லிமன்சா குவித்த அரைச் சதம், லிமன்சாவும் ஷஷ்மி கிம்ஹானியும் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 56 ஓட்டங்களும் அணித் தலைவி சமோதி ப்ரபோதா, அசேனி தலகுனே ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணியை வெற்றி அடையச் செய்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் லிமன்சா திலக்கரட்ன 51 ஓட்டங்களையும் ஷஷ்மி கிம்ஹானி 39 ஓட்டங்களையும் தனோத்யா செவ்மினி 11 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை. உதிரிகளாக 29 ஓட்டங்கள் கிடைத்தது.
171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணி சகல விக்கெட்களையும் இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அணித் தலைவி ப்றையோனி ஜில்க்ராஸ் 35 ஓட்டங்களையும் கடைநிலை வீராங்கனை பீ வில்லிஸ் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் அமேலியா ஒலிவர் 15 ஓட்ங்களையும் ஷ்ரிஸ்டி பட்டில் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அசேனி தலகுனே 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 9.1 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சமோதி ப்ரபோதா 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM