பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஓம்பலிடிஸ் எனும் பாதிப்பிற்கான சிகிச்சை

07 Apr, 2026 | 03:16 PM
image

இன்றைய திகதியில் இப்புவியில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைகளும் முழு ஆரோக்கியத்துடன் பிறப்பதற்கான அனைத்து மருத்துவ தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் உலக அளவில் ஆயிரம் குழந்தைகள் பிறந்தால்.. அதில் ஒரு குழந்தைக்கு ஓம்பலிடிஸ் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் தொப்புள் கொடி தொற்று பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இதற்கு அந்த குழந்தையின் பெற்றோர்கள் முழுமையான விழிப்புணர்வுடன் பிள்ளையை பராமரிக்க வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பொதுவாக தாயின் வயிற்றிலிருந்து சிசு வெளியான இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் தொப்புள் கொடியை பாதுகாப்பான முறையில் அகற்றுவார்கள்.

அதன் பிறகு அந்த அகற்றப்பட்ட தொப்புள் கொடி குழந்தையின் தொப்புள் பகுதியில் இருந்து ஏழு அல்லது பத்து நாட்களுக்குள் உலர்ந்து உதிர்ந்து விடும். இது இயல்பாக அனைவருக்கும் நடைபெறும்.

ஆனால் சில பிள்ளைகளுக்கு இப்பகுதியில் தொற்று பாதிப்பு ஏற்படும். குறிப்பாக பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் அதற்குரிய அறிகுறிகள் வெளிப்படும்.

பச்சிளம் குழந்தைகளின் தொப்புள் பகுதியில் வீக்கம், சிவந்திருத்தல், சீழ் அல்லது இரத்தக் கசிவு, துர்நாற்றம், காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம். 

அந்தப் பகுதியை பிள்ளையை பெற்ற பெற்றவர்கள் முழுமையான சுகாதாரத்துடன் பராமரிக்காததால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால்.. உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

அவர்கள் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவர். அத்துடன் அப்பகுதியை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்த மருத்துவ ரீதியிலான நடைமுறை குறித்தும் எடுத்துரைப்பர்.

வைத்தியர் ஸ்ரீ தேவி தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளாண்டர் ஃபாசிடிஸ் எனும் கால் வலி...

2026-04-16 15:27:44
news-image

பிரசவகால சிக்கலுக்குரிய நவீன சிகிச்சை

2026-04-15 18:48:07
news-image

நான் இன்வாஸிவ் வென்டிலேசன் எனும் நவீன...

2026-04-14 14:30:52
news-image

கோடைகால வெப்ப நிலையால் மாரடைப்பு பாதிப்பு...

2026-04-13 17:51:35
news-image

ஓஸ்டியோமலாசியா எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-04-11 15:00:40
news-image

சப்டூரல் ஹெமடோமா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2026-04-10 13:12:32
news-image

ப்ரூக்ஸிசம் எனும் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

2026-04-09 15:41:22
news-image

எலிபன்ட்டயாசிஸ் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை.

2026-04-08 16:58:37
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஓம்பலிடிஸ் எனும்...

2026-04-07 15:16:47
news-image

அழகான பற்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-06 16:40:00
news-image

நாட்பட்ட மூட்டு வலி பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-04-04 17:31:49
news-image

பார்வை திறனை மேம்படுத்தும் நவீன சிகிச்சை...

2026-04-03 15:46:07