நடிகர் ஜெய் நடிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை' படத்தின் அப்டேட்ஸ்

07 Apr, 2026 | 03:12 PM
image

தமிழ் திரையுலகில் வணிக சந்தை மதிப்பு கொண்ட நடிகரான ஜெய் கதையின் நாயகனாக நடித்து வரும் 'சட்டென்று மாறுது வானிலை'  திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்றாவது  பாடலும் ,பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில் உருவாகி வரும்' சட்டென்று மாறுது வானிலை' திரைப்படத்தில் ஜெய் , மீனாட்சி கோவிந்தராஜன்,  யோகி பாபு , கருடா ராம், ஸ்ரீ மன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார்.

ரொமான்டிக் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி வி ஃப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபு விஜய் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் ஆதரவை பெற்றிருந்த நிலையில்... இப்படத்தில் இடம்பெற்ற 'பல வேடிக்கை மனிதரைப் போல..' என தொடங்கும் மகாகவி பாரதியாரின் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை மகாகவி பாரதியார் மற்றும் பாடலாசிரியர் மதுரை சோல்ஜர் ஆகியோர் இணைந்து எழுத, பின்னணி பாடகர் மதுரை சோல்ஜர் மற்றும் இசையமைப்பாளரும் பாடகருமான க்ரிஷ் ஜி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். 

பாரதியாரின் பாடல் வரிகள் மற்றும் இளைய தலைமுறையினரின் ஆங்கிலம் கலந்த றாப் பாடல்கள் ஆகியவற்றின் கலவையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45
news-image

திரு வீர்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து...

2026-07-13 16:33:09
news-image

இசை குயில் 'எஸ். ஜானகிக்கு இந்தியத்...

2026-07-12 14:14:16
news-image

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி...

2026-07-11 21:42:07