இன்றைய சூழலில் எம்மில் பலரும் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்காமல்.. கிடைத்த வேலையை செய்து, தங்களது வாழ்வாதாரத்தை நிர்வகித்து வருகிறார்கள்.
இருப்பினும் மனதில் படிப்புக்கேற்ற வேலை கிடைத்து விடாதா..! என ஆசையுடனும் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான வழிபாட்டினை முன்மொழிந்து, அதனை நம்பிக்கையுடன் கடைப்பிடித்தால் விரைவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதன் ஊடாக உங்களது முன்னேற்றமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
21 என்ற எண்ணிக்கையிலான பச்சை மிளகாயை வாங்கி, அதில் உங்களது பெயரை எழுதியும் மற்றவற்றில் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி... எனக்கு நிரந்தரமான பிடித்த வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
முருகனுக்கு நன்றி. விநாயகருக்கு நன்றி.. என எழுதி நெடுஞ்சாலையில் வீசி விடுங்கள். நான்கு சக்கர வாகனங்களும் அதைவிட அதிக சக்கரம் கொண்ட வாகனங்களும் அதன் மீது பயணித்து அவை அழுத்தப்பட்டவுடன்.. இந்த பிரபஞ்சத்திற்கு உங்களுடைய கோரிக்கை தெரிய வரும். அதன் பிறகு உங்களுக்கான சுப செய்திகள் கிடைக்கும்.
அத்துடன் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்தில் ஆறு நெய் தீபங்களை ஏற்றி அர்ச்சனை செய்து, தேனும் திணை மாவினையும் நிவேதனமாக படைத்து வணங்கி, அதனை தானமாக வழங்கிட வேண்டும். இதனை தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்து வந்தால்.... நீங்கள் எதிர்பார்க்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சிலர் முருகன் ஆலயத்திற்கு சென்று சிறிய அளவிலான வேல் ஒன்றினை வாங்கி, முருகனின் பாதத்தில் வைத்து எடுத்து, அதனை உங்களுடன் எடுத்துச் சென்று நேர்காணலில் பங்குபற்றினாலும் ..விருப்பத்திற்குரிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இப்படி சில சூட்சமமான வழிபாட்டை நம்பிக்கையுடன் பின்பற்றும் போது நீங்கள் எதிர்பார்க்கும் நிரந்தரமான வேலை வாய்ப்பு கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM