தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான ஆர்யா- சரத்குமார் -கௌதம் ராம் கார்த்திக்- மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் தோன்றும் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படத்தில் ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் , அனகா, ரைசா வில்சன், அதுல்யா , ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.
இந்திய உளவுத்துறையில் பணியாற்றிய அதிகாரிகளின் தியாகங்களை போற்றும் வகையில் உருவாகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM