தமிழ் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்துடன் உலா வரும் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஓ...! சுகுமாரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ..! சுகுமாரி' திரைப்படத்தில் நடிகர் திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சி ஹெச் குசேந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் மன்சி ராஜு இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கங்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி தயாரித்திருக்கிறார்.
தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடி படமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது என்றும் விரைவில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 'டியர் ', 'தீயவர் கொலை நடுங்க' என இரண்டு தோல்வி படங்கள் மட்டுமே வெளியாகி இருப்பதால்... ரசிகர்கள் அவரை மறக்க தயாராகும் தருணத்தில் அவர் நடிப்பில் தயாராகி வரும் 'ஓ...! சுகுமாரி' படத்தின் செய்திகள் வெளியாகி இருப்பதால்.. அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM