நடிகர் ஆர் ஜே விஜய் நடிக்கும் ' வைஃப் ' படத்தின் முதல் பாடல் வெளியீடு

07 Apr, 2026 | 02:35 PM
image

தொகுப்பாளராகவும் , குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களால் அறியப்பட்ட நடிகர் ஆர் ஜே விஜய் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'வைஃப்' திரைப்படத்தில் இடம்பெறும் 'நீ சாரல்..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வைஃப் ' திரைப்படத்தில் ஆர் ஜே விஜய், அஞ்சலி நாயர், மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நடராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே ஏ சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். திருமணமான இளம் தம்பதிகளின் வாழ்வியல் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தில் இடம்பெற்ற 'ஒரு  நாளில் மஞ்சள்..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுத பின்னணி பாடகர் ஜென் மார்ட்டின் மற்றும் பின்னணி பாடகி சுப்லாஷினி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்தப் பாடலை இசை ரசிகர்கள் பெரிதும் வரவேற்று இருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right