(நெவில் அன்தனி)
இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கம் இந்த வருடம் நடத்திய 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதலாம் பிரிவு டயலொக் ஜனாதிபதி றக்பி நொக் அவுட் இறுதிப் போட்டியில் றோயல் கல்லூரியை 58 (10 ட்ரைகள், 4 கொன்வேர்ஷன்கள்) - 26 (4 ட்ரைகள், 3 கொன்வேர்ஷன்கள்) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் துவம்சம் செய்த திரித்துவ கல்லூரி சம்பியன் பட்டத்தை சூடியது.
1987, 1993, 2011 ஆகிய வருடங்களில் ஜனாதிபதி கிண்ணத்தை சுவீகரித்திருந்த திரித்துவ கல்லூரி, 15 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக டயலொக் ஜனாதிபதி கிண்ண சம்பியன் பட்டத்தை சூடியுள்ளது.

போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன. ஆனால் போட்டி ஆரம்பித்து 15 நிமிடங்கள் பின்னர் திரித்துவம் முழுமையான ஆதிக்கம் செலுத்தி றோயல் அணியை பரிதவிக்க வைத்தது.
இடைவேளையின்போது திரித்துவ கல்லூரி 15 புள்ளிகள் வித்தியாசத்தில் (27 - 15) முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய திரித்துவம் மேலும் 31 புள்ளிகளைப் பெற்றதுடன் றொயல் கல்லூரி 17 புள்ளிகளை மாத்திரம் பெற்றது.
மிகத் திறமையாக விளையாடியதுடன் அணிறை சிறப்பாக வழிநடத்திய திரித்துவ அணித் தலைவர் ஷான் அல்தாப் 21 புள்ளிகளை (3 ட்ரைகள், 3 கொன்வெர்ஷன்கள்) தனி ஒருவராகப் பெற்றுக்கொடுத்தார்.
அவரை விட திமத் அம்பேபிட்டிய (2 ட்ரைகள்), அம்மார் மன்ஸில் (2 ட்ரைகள், அப்முல மாலிக் (2 ட்ரைகள்), கெவின் வீரக்னோன் (ஒரு ட்ரை), அம்மார் பைஸால் (ஒரு கொன்வேர்ஷன்) ஆகியோர் திரித்துவ அணிக்கான புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தனர்.
இப் போட்டியில் திரித்துவம் சார்பாக மிகத் திறமையாக விளையாடிய உதான் விஜேகோன் ஆட்ட நாயகன் விருதை வென்றெடுத்தார்.
றோயல் சார்பாக லெமித் அமரசிங்க, திசாஸ் பத்திரன, ஹிருக்க ஜயதினு, அக்கிர யட்டவர ஆகியோர் தலா ஒரு ட்ரைகளை வைத்ததுடன் மொஹமத் சிமக் 3 கோன்வேர்ஷன் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.
டயலொக் ஆசிஆட்டா குழுமத்தின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி லசன்த தேவரப்பெரும பிரதம அதிதியாக கலந்துகொண்டு டயலொக் ஜனாதிபதி வெற்றிக் கிண்ணத்தை திரித்துவ அணித் தலைவர் ஷான் அல்தாபிடம் வழங்கினார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவௌ, இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத் தலைவர் புத்திக்க அத்தநாயக்க, டயலொக் ஆசிஆட்டா குழுமத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்க ஆகியொரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM