ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகளை கடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

Published By: Digital Desk 1

07 Apr, 2026 | 10:46 AM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இந்தியாவிலிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கடத்தி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை இந்தியாவின் பெங்களூரு நகரிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸின் 6நு-1183 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நான்கு பயணிகளே இவ்வாறு சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்புப் பகுதியைச் சேர்ந்த நால்வர் எனவும் இவர்களில் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட மூன்று இளைஞர்களும், 45 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்துப் பொருட்களை, விமான நிலையத்தின் புசநநn ஊhயnநெட ஊடாக கடத்திச் செல்ல முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 08 பயணப் பொதிகளிலிருந்து சுமார் 65 கிலோகிராம் எடையுள்ள தடுப்பூசிகள், மருந்துக் குளிசைகள், மாத்திரைகள் மற்றும் கிறீம் வகைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மருந்துப் பொருட்களுக்கு சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதி பெறப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட மருந்துத் தொகுதியின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபர்களைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23
news-image

மரியா காஸ்டிலோ - அருண் ஹேமச்சந்திர...

2026-05-09 20:47:28