ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 36 ஆவது கூட்­டத்­தொ­டரில் கலந்­து­கொள்­வ­தற்­காக ரியர் அட்­மிரல் சரத்­ வீ­ர­சே­கர நாளை ஜெனிவா பய­ண­மா­க­வுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஆகி­யோரின் விசேட ஆலோ­ச­னைக்­க­மை­வா­கவே அவர் ஜெனிவா பய­ண­மா­க­வுள்ளார்.   

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர வையின் 36 ஆவது கூட்டத் தொடரில்  இலங்கை குறித்த விவ­கா­ரங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்­ள­டக்­க­ப்பட­வில்லை. எனினும் சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்­புகள் தமது உரை­க­ளின்­போது இலங்கை சம்­பந்­த­மான கேள்­விகளை எழுப்­ப­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

இதே­வேளை மனித உரி­மைகள் அமைப்­புகள் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரி­ய­விற்கு எதி­ராக போர்­க் குற்ற வழக்கு தாக்கல் செய்­துள்­ளன. அவ்­வி­வ­காரம் தொடர்பில் தற்­போது சர்­வ­தேசம் மிகுந்த அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது. அத்­துடன் ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய இறு­தி­க் கட்டப் போர் நட­வ­டிக்­கை­களில் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­மைக்­கான ஆதா­ரங்கள் உள்­ள­தாக பீல்ட் ­மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்ளார். 

எனவே அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இலங்கை மீதான போர்­க் குற்ற விவ­காரம் இறுக்­க­ம­டை­யலாம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எனினும் மனித உரி­மைகள் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடரில் இல­ங்கை­யி­லி­ருந்து அமைச்­சர்கள் குழு பங்கேற்கவில்லை. இவ்வா றான நிலையிலேயே ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனிவாவில் நடைபெறும் உப குழுக் கூட்டங்களில் பங்கேற்க  ஜெனிவா சென்றுள்ளார்.