'பிரேக்ஃபாஸ்ட் படத்தில் இன்றைய வாழ்க்கை நடைமுறை தொடர்பான அறிவுரையை நாங்கள் சொல்லவில்லை'- இயக்குநர் காந்தி கிருஷ்ணா

06 Apr, 2026 | 05:06 PM
image

'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' ஆகிய படத்தை படங்களை இயக்கிய இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிரேக் பாஸ்ட் ' திரைப்படத்தில் ராணவ், ரோஸ்மின் , சம்பத்குமார் , கஸ்தூரி,  கிருத்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை விவரிக்கும் இந்தத் திரைப்படத்தை பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரிஜா வரதராஜ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டும் பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா பேசுகையில், '' இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட முடியாத சூழலில் இருக்கிறோம். காதல் ஜோடிகளுக்கு நாங்கள் அறிவுரை சொல்லவில்லை.

ஆனால் இந்த கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான்.. அதனை நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் எம்முடைய கலாச்சாரம். இதனை வணிக ரீதியான முறையில் விவரித்திருக்கிறோம் '' என்றார்.

இத்திரைப்படம் 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்றும், திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்றி தெரிவித்த சூர்யா!

2026-08-16 11:12:29
news-image

மகுடம் - திரைப்பட விமர்சனம்

2026-08-15 16:27:02
news-image

ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப் '...

2026-08-15 16:29:50
news-image

துஷ்யந்த் நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' படத்தின்...

2026-08-15 19:13:44
news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-08-15 15:43:22
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாரீஸ் கஃபே'...

2026-08-15 15:45:02
news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56